கோடையில் கோழி, சிக்கன்; வேண்டவே வேண்டாம்! 

By வி. ராம்ஜி

கோடை காலத்தில், உடலானது அளவுக்கு அதிகமான உஷ்ணத்தில் தகிக்கும். ‘சாதாரணமாவே நம்ம ஹீட்பாடி. இதுல இந்த வெயில்ல இன்னும் ஜாஸ்தியாகி தாங்கமுடியலப்பா’ என்று புலம்புவர்களே இங்கு அதிகம்.

இந்த நிலையில், கோழி, கருவாடு முதலானவற்றை இந்தக் கோடையில் முழுவதுமாகத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

வருடாவருடம், நமக்கெல்லாம் வயது ஏறுவதைப் போல, கோடையின் தாக்கம் ஏறிக்கொண்டேதான் இருக்கிறது. நாடு முழுவதும் இந்த ஆண்டு கோடை காலத்தில் இயல்பை விட 1 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அக்கினி நட்சத்திரம் வருவதற்கு முன்னதாகவே, திருத்தணி, திருச்சி, கரூர், சேலம், வேலூர் என பல ஊர்கள் தினமும் செஞ்சுரியைத் தாண்டி, அனல் கக்கிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 9 நகரங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியுள்ள நிலையில், தமிழகம் முழுவதுமே இரவு நேரங்களில் புழுக்கம் நிலவிக்கொண்டிருக்கிறது.

இயல்பை விட வெப்பம் அதிகரித்து வருவதால், கோடையில் பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆட்பட நேரிடும். உடலில் இருந்து வியர்வையாக அதிக நீர் வெளியேறும் வாய்ப்புகளே அதிகம். இதனால் அயர்ச்சி, தளர்ச்சி, மயக்கம் முதலானவை ஏற்படலாம்.  

வெயிலின் தாக்கத்தால் உடலில் வியர்வை வெளியேறி வேர்க்குரு, அரிப்பு, தேமல், மணல்வாரி அம்மை, வயிற்றுப் பிரச்சினை முதலானவை ஏற்படும். தண்ணீரை அதிகம் குடிப்பதே உத்தமம். அப்படி தண்ணீர் குடிக்காதவர்களுக்கு சிறுநீரகத்தி கல் முதலான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். உச்சி வெயிலில் விளையாடும் குழந்தைகளைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும். அவர்களுக்கு, வெயில் உக்கிரத்தால், வலிப்பு வருவதற்குக் கூட வாய்ப்பு இருக்கிறது.

தினமும் குறைந்தது 5 முதல் 7 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் சிறுநீர் கல் ஏற்படுவதை தடுக்கலாம். உடல் உஷ்ணத்தையும் தணித்துக்கொள்ளலாம். நீர்ச் சத்துள்ள வெள்ளரிக்காய், தர்பூசணி முதலானவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும். பழச்சாறு, இளநீர், மோர் அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள்.

கார்பைடு கல் வைத்து செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிடக்கூடாது. முடிந்தவரை இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்துவிடுங்கள்.  தளர்வான மெல்லிய பருத்தி ஆடைகளை அணியுங்கள்.

பகல் 12 முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படி வெளியே செல்பவர்கள் கண்டிப்பாக தலைக்கு தொப்பி அணிந்து செல்லுங்கள். கையில் குடை வைத்துக்கொள்ளுங்கள். கண்ணுக்கு கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டால், வெயிலின் தாக்கத்தில் இருந்து கண்களைப் பாதுகாக்கலாம்.

தினமும் காலையிலும் மாலையிலும் அல்லது காலையிலும் இரவிலும் குளிப்பது இந்தக் கோடை உக்கிரத்துக்கு மிகவும் நல்லது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் கோழி அதாவது சிக்கன் அயிட்டங்கள், கருவாடு போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஆட்டு இறைச்சி, மீன் முதலான அசைவத்தை அளவோடு சாப்பிடலாம். உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள் என அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.

கோடை வெயிலின் போது, சிக்கன் முதலான அசைவங்களை சாப்பிட்டால், உடலில் மேலும் உஷ்ணம் பரவும். இதனால், உடலானது வெப்பத்தைத் தாங்கமுடியாமல் போகும். மேலும் வயிற்றுப்போக்கு முதலான உபாதைகள், மூலம் முதலான பிரச்சினைகள் வரக்கூடும். பொதுவாகவே, கோடைக் காலத்தில் கார உணவுகளைத் தவிர்ப்பதே ரொம்ப ரொம்ப நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்