தேர்தலில் கட்சிக்காகப் போட்டியிடுவோர் ஒரு வகை. சுயேச்சைகளாகக் களமிறங்குவோர் ஒரு வகை. சுயேச்சைகளிலும் பல உட்பிரிவுகள் உண்டு. அதிகம் தோற்ற வேட்பாளர் என்ற பெருமையைத் தக்கவைத்துக்கொள்வதற்காகத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர், சேலம் பத்மராஜன். ஹோமியோபதி மருத்துவரான இவர், 1989-ம் ஆண்டு முதன்முறையாக மேட்டூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். கடந்த 30 ஆண்டுகளாக ஓயாமல் தேர்தலில் போட்டியிட்டுவருகிறார். இதுவரை மக்களவை, சட்டமன்றத் தேர்தலில் மட்டும் 200 முறை போட்டியிட்டிருக்கிறார். இதில் மக்களவைத் தேர்தலில் 28 முறை வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். தேர்தலில் போட்டியிடுவதோடு சரி, தேர்தல் செலவு என எதையும் இவர் செய்வதில்லை.
ஆனால், தேர்தலில் போட்டியிட்டு அவர் இழந்த தொகையே 20 லட்சம் ரூபாய்க்கும் மேலிருக்கும். இதுவரையில் தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், டெல்லி ஆகிய மாநிலங்களில் மட்டுமே போட்டியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் பத்மராஜன். தற்போது, 201-வது
முறையாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார் பத்மராஜன்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago