முற்காலச் சோழர்களின் தலைநகராக விளங்கிய உறையூரை உள்ளடக்கியது திருச்சி. பல்லவர்கள், பாண்டியர்கள், ஹொய்சாளர்கள், முகலாயர்கள், விஜயநகர மன்னர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்களின் நிர்வாகக் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த பகுதி இது. தனி ராஜ்ஜியமாகச் செயல்பட்ட புதுக்கோட்டை சமஸ்தானமும் இந்தத் தொகுதிக்குள்தான் வருகிறது. திருச்சி மாவட்டத்தின் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிகளும், புதுக்கோட்டை மாவட்டத்தின் புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை தொகுதிகளும் திருச்சி மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
பொருளாதாரத்தின் திசை: விவசாயமே பிரதானத் தொழில். தென்னிந்தியாவிலேயே அதிகளவில் வாழை உற்பத்தி செய்யப்படும் பகுதி இது. நெல் சாகுபடியும் அதிகம். கந்தர்வக்கோட்டை பகுதியில் முந்திரி சாகுபடி அதிகமாக உள்ளது. பாரத மிகுமின் நிலையம் (பெல்), படைக்கலத் தொழிற்சாலை (ஓ.எஃப்.டி), கனரக உலோக ஊடுருவி தொழிற்சாலை
(ஹெச்.ஏ.பி.பி), பொன்மலை ரயில்வே பணிமனை போன்ற மத்திய அரசு நிறுவனங்களும், அவை சார்ந்த சிறு, குறு தொழில் நிறுவனங்களும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் காரணிகளாக உள்ளன. ஆன்மிகச் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா, கல்விச் சுற்றுலா ஆகியவற்றிலும் திருச்சி முக்கியப் பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய மாவட்டங்களில் திருச்சி 6-வது இடத்தில் உள்ளது.
தீர்மானிக்கும் பிரச்சினைகள்: பெல் நிறுவனத்துக்கான ‘ஆர்டர்’கள் குறைந்ததால், அதன் சார்பு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மின்வெட்டு, பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவற்றின் காரணமாக முடங்கிய ஏராளமான சுயதொழில் நிறுவனங்கள், அதிலிருந்து மீள முடியாமல் தவித்துவருகின்றன. அதேபோல கஜா புயலால் தென்னை, கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே புரட்டிப்போட்டிருக்கின்றன. வானம் பார்த்த பூமி என்பதால், போதிய மழையின்றி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பின்மையும் இந்தத் தொகுதியின் முக்கியப் பிரச்சினை.
நீண்ட காலக் கோரிக்கைகள்: காவிரியிலிருந்து பிரிந்துசெல்லும் 18 வாய்க்கால்கள், ஏரிகள், குளங்களைத் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும்; காவிரி, கொள்ளிடத்தில் மணல் அள்ளுவதைத் தடுக்க வேண்டும்; காவிரி - குண்டாறு - வைகை இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் வாழ்வதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இத்தொகுதியில் தொடர்ந்து ஒலிக்கின்றன. திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்; அரைவட்ட சுற்றுச்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; கந்தர்வக்கோட்டையில் முந்திரி சார்ந்த தொழிற்சாலைகள், தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டைக்குப் புதிதாக ரயில் வழித்தடம், புதுக்கோட்டையில் அரசுப் பொறியியல் கல்லூரி ஆகியவற்றுக்கான கோரிக்கைகளுடன் காத்திருக்கிறார்கள் இத்தொகுதி மக்கள்.
ஒரு சுவாரஸ்யம்: இத்தொகுதியில் ‘மண்ணின் மைந்தன்’ என்ற முழக்கம் பெரிதாக எடுபடுவதில்லை. 1998, 1999 தேர்தல்களில் சேலத்தைச் சேர்ந்த ரங்கராஜன் குமாரமங்கலம் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
2001-ல் அதிமுகவின் தலித் எழில்மலை, 2004- ல் மதிமுகவின் எல்.கணேசன் ஆகிய வெளியூர்க்காரர்கள் வென்றனர். வெளியூர் வேட்பாளர்களை இந்தத் தொகுதி மக்கள் வெளியாட்களாகப் பார்ப்பதில்லை!
வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: திருச்சி மேற்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கத்தின் ஒரு பகுதி, புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளில் முக்குலத்தோர் அதிகமாக உள்ளனர். அச்சமூகத்தைச் சேர்ந்த சு.திருநாவுக்கரசர் காங்கிரஸ் வேட்பாளராகவும், சாருபாலா தொண்டைமான் அமமுக வேட்பாளராகவும் நிறுத்தப்பட்டுள்ளதன் முக்கியப் பின்னனி அதுதான். முத்தரையர், வெள்ளாளர், இஸ்லாமியர், பட்டியலினச் சமூகத்தினரும் இத்தொகுதியில் கணிசமாக உள்ளனர்.
அதிக வெற்றியை ருசித்தவர்கள்: இத்தொகுதியில் அதிக முறை தேர்வு செய்யப்பட்டவர் எல்.அடைக்கலராஜ். 1984, 1989, 1991 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் சார்பிலும், 1996-ல் தமாகா சார்பிலும் போட்டியிட்டு வென்று, தொடர்ச்சியாக நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூன்று முறை வென்றுள்ளது. பாஜகவின் ரங்கராஜன் குமாரமங்கலம், அதிமுகவைச் சேர்ந்த ப.குமார் ஆகியோர் தலா இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளனர். திமுக ஒரே ஒரு முறை வென்றிருக்கிறது!
வாக்காளர்கள் யார்?
மொத்தம் 14,89,267
ஆண்கள் 7,30,668
மூன்றாம் பாலினத்தவர்கள் 140
சமூகங்கள் என்னென்ன?
இந்துக்கள்: 81.5%
முஸ்லிம்கள்: 11%
கிறிஸ்தவர்கள்: 6%
பிற சமயத்தவர் 1.5%
எழுத்தறிவு எப்படி?
மொத்தம் 74.89%
ஆண்கள் 80.43%
பெண்கள் 69.43%
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago