ஆட்சிக்காலத்தை முழுமையாக நிறைவுசெய்த வாஜ்பாய்!

By சந்தனார்

இரு முறை குறுகிய காலப் பிரதமராகவே இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் முழுமையான ஆட்சிக் காலத்தைத் தருவதற்கு வாய்ப்பளித்த தேர்தல் 1999-ல் நடந்த மக்களவைத் தேர்தல். அதற்கு முந்தைய மூன்று தேர்தல்களைப் போல் அல்லாமல், ஸ்திரத்தன்மை வாய்ந்த அரசை அந்தத் தேர்தல் வழங்கியது. முதன்முறையாக வலதுசாரி அரசு ஐந்தாண்டு (1999 - 2004) ஆட்சிக்காலத்தை நிறைவுசெய்தது. கூட்டணி பலமே அதற்கு அச்சாரமாக அமைந்தது.

செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 3 வரை நடந்த இத்தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 270 இடங்களில் வென்றது. பாஜக இந்தத் தேர்தலில் 182 இடங்களில் வெற்றிபெற்றது. எனினும், முந்தைய தேர்தலைவிடவும் அக்கட்சிக்கு 2% வாக்குகள் குறைவாகவே கிடைத்தன. உத்தர பிரதேசம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் 1998 மக்களவைத் தேர்தலைவிடவும் குறைவான இடங்களே அக்கட்சிக்குக் கிடைத்தன. இத்தனைக்கும் இந்தத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்னர், கார்கில் போர் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் போர் மூலம் பாஜகவுக்கு ஆதரவு அதிகரித்துவிடவில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இந்தக் கூட்டணியில் அதிமுகவின் இடத்துக்கு வந்திருந்த திமுக 12 இடங்களில் வென்றது. ஐக்கிய ஜனதா தளம், சிவசேனை, பிஜூ ஜனதா தளம், பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இக்கூட்டணியில் இடம்பெற்றிருந்தன. எதிர் அணியில், காங்கிரஸுக்கு 114 இடங்கள் கிடைத்தன. இடதுசாரிக் கட்சிகள் இணைந்து அமைத்த மூன்றாவது கூட்டணி பெரும் தோல்வியைச் சந்தித்தது. காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட அதிமுக 10 இடங்களில் வென்றது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த கட்சிகளுக்கு நல்ல சுதந்திரம் வழங்கப்பட்டது. 2002-ல் குஜராத் கலவரம் நடந்தபோது கூட்டணியில் பெரிய அளவுக்குச் சிதைவு ஏற்படாததற்கு இந்த அணுகுமுறை ஒரு காரணமாக அமைந்தது. கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே ஓர் இணைப்பிழையாக ஜார்ஜ் பெர்னாண்டஸ் செயலாற்றினார்.

2003-ல் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் கிடைத்த வெற்றியால் பாஜகவுக்குப் பெரும் நம்பிக்கை உருவாகியிருந்தது. இதையடுத்து மக்களவைக்குத் தேர்தலை நடத்த அக்கட்சி திட்டமிட்டது. ‘இந்தியா ஒளிர்கிறது’ எனும் விளம்பர முழக்கத்துடன் 2004 தேர்தலைச் சந்தித்தது. ஆனால், பாஜகவின் கணக்கு எடுபடவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

13 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

மேலும்