13 மாதங்களே நீடித்த வாஜ்பாய் ஆட்சி!

By ஜூரி

குஜ்ரால் அரசு கவிழ்ந்த பின்னர், 1998-ல் மீண்டும் மக்களவைத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலிலும் எந்தக் கட்சிக்கும் - கூட்டணிக்கும் பெரும்பான்மை வலு கிடைக்கவில்லை. பாஜக 182 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸுக்கு 141 இடங்கள் கிடைத்தன. ஐக்கிய முன்னணிக்கு 64 தொகுதிகளும் ஜனமோர்ச்சாவுக்கு 24 தொகுதிகளும் கிடைத்தன. மார்க்சிஸ்ட் 32, சமாஜ்வாதி 20, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 17, தெலுங்கு தேசம் 12, இந்திய கம்யூனிஸ்ட் 9, திமுக 6, அதிமுக 18, பகுஜன் சமாஜ் 5 தொகுதிகளில் வென்றன.

பெரும்பான்மை இல்லாத நிலையில், பெர்னாண்டஸ் தலைமையிலான சமதா, பிஜு ஜனதா தளம், சிரோமணி அகாலிதளம், திரிணமூல் காங்கிரஸ், சிவசேனை, அதிமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்தது. வாஜ்பாய் பிரதமராகப் பொறுப்பேற்றார். சில கோரிக்கைகளை நிறைவேற்ற வாஜ்பாய் அரசு மறுத்ததால் அரசுக்கு அளித்த ஆதரவை அதிமுக விலக்கிக்கொண்டது.

மக்களவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் தோற்றார். ஒடிஷாவில் காங்கிரஸ் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட கிரிதர் கமாங் இரண்டு மாதங்களாக முதல்வராகப் பதவியில் இருந்த நிலையிலும் மக்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யாமல் இருந்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் வாக்களிக்காமல் இருந்திருந்தால் சமநிலை ஏற்பட்டிருக்கும். ஆனால், அவர் வாக்களிப்பதற்காகவே மக்களவைக்கு வந்தார். அவர் வாக்களிக்காமல் இருந்திருந்தால் நிலைமை மாறியிருக்கும். மக்களவைத் தலைவர், அரசுக்கு ஆதரவாகத் தனது வாக்கைச் செலுத்தி அரசைக் காப்பாற்றியிருக்கக்கூடும். இந்திய அரசியல் வரலாற்றில் நடந்த விசித்திரங்களில் இதுவும் ஒன்று. கடந்த முறை 13 நாட்களே நீடித்த அவரது ஆட்சி, இந்த முறை 13 மாதங்கள் மட்டுமே நீடித்தது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வாஜ்பாய் அரசுக்கு எதிராக திமுகவும் வாக்களித்தது. ஆனால் அக்கட்சியின் சார்பில் பேசிய முரசொலி மாறன், குதிரை பேரத்தில் ஈடுபடாமல் பெருந்தன்மையுடன் மக்களவையைச் சந்தித்ததற்காக வாஜ்பாய்க்குப் புகழாரம் சூட்டினார். அடுத்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் திமுக தேர்தல் கூட்டணி அமைக்க அந்தப் பாராட்டு அச்சாரமாகத் திகழ்ந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்