அமைந்தது தேசிய முன்னணி அரசு

By ஜூரி

ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் புகார் வெடித்தது. அவரது அமைச்சரவையில் பாதுகாப்பு, நிதி ஆகிய துறைகளை வகித்த வி.பி.சிங், போஃபர்ஸ் பீரங்கி பேரம் தொடர்பான தகவல்கள் வெளியானவுடன் ராஜீவுக்கு எதிராகத் திரும்பினார். இதையடுத்து கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி, அருண் நேரு, ஆரிஃப் முகம்மது கான் ஆகியோருடன் இணைந்து ‘ஜன மோர்ச்சா’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். பிறகு ஜனதா தளத்தில் சேர்ந்தார்.

பஞ்சாபில் மீண்டும் பயங்கரவாதச் செயல்கள் தலைதூக்கியதாலும் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையில் உள்நாட்டுப் போர் மூண்டதாலும் மக்களிடையே ராஜீவின் செல்வாக்கு குறைந்தது. இந்தப் பிரச்சினைகள் 1989-ல் நடந்த 9-வது மக்களவைத் தேர்தலில் எதிரொலித்தன. காங்கிரஸ் அணி, பாஜக ஆகியவற்றுடன் வி.பி.சிங் உருவாக்கிய தேசிய முன்னணியும் களத்தில் இருந்தது. தெலுங்கு தேசம், திமுக, அசாம் கண பரிஷத் உள்ளிட்ட மாநிலக் கட்சிகளை இணைத்து தேசிய முன்னணி அமைக்கப்பட்டது.

இந்தத் தேர்தலில் காங்கிரஸுக்கு 197 இடங்கள் கிடைத்தன. தேசிய முன்னணி 143 தொகுதிகளிலும், பாஜக 85 இடங்களிலும் வென்றன. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில்,

இடதுசாரிக் கட்சிகள், பாஜக துணையுடன் பிரதமரானார் வி.பி.சிங். பெரும் சவால்கள் காத்திருந்தன. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு செய்ய மண்டல் கமிஷன் முன்னர் அளித்திருந்த பரிந்துரையை வி.பி.சிங் அமல்படுத்தியது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. சமூகநீதிக் காவலராக வெகுவாகப் பாராட்டப்பட்டார். எனினும், இதற்குக் கடும் எதிர்ப்பும் எழுந்தது. இதற்கிடையே அயோத்தி பிரச்சினையைக் கையிலெடுத்தது பாஜக. நாடு முழுவதும் ரத யாத்திரைகளை நடத்தியது. இதைத்

தடுத்து நிறுத்த வி.பி.சிங்கும் லாலு பிரசாதும் முடிவுசெய்தனர். அத்வானி தலைமையிலான ரத யாத்திரை பிஹாருக்கு வந்தபோது

அத்வானியைக் கைது செய்தார் லாலு. இதை தேசிய முன்னணி அரசு தடுக்காததால் அந்த அரசுக்கு அளித்த ஆதரவை பாஜக விலக்கிக்கொண்டது.  வி.பி.சிங் பதவி விலகினார்.

இச்சமயத்தில் இந்திரா காந்தியின் பாணியில் ஜனதா தளத்தை இரண்டாக உடைத்த ராஜீவ், சந்திரசேகர் பிரதமராக வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்தார். அரசியல் குழப்பங்கள் மேலும் அதிகரித்தன!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்