சான்ஸ் ஃபார்காட்டிகா: நினைவாற்றலைப் பெருக்கும் எழுத்துரு முயற்சி

By பா.ஜம்புலிங்கம்

வாசகர்கள் படித்ததை மனதில் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளவும், மாணவர்கள் நினைவாற்றலை தக்கவைத்துக்கொள்ளவும் வாய்ப்பாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள ஆர்எம்ஐடி பல்கலைக்கழகத்தின் உளவியல் மற்றும் வடிவமைப்புப் பிரிவின் ஆய்வாளர்கள் சான்ஸ் ஃபார்காட்டிகா (Sans Forgetica) என்ற ஒரு புதிய ஆங்கில எழுத்துருவினை உருவாக்கியுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் 400 பேரை வைத்து நடத்தப்பட்ட ஆய்வின்படி, சாதாரண ‘ஏரியல்’ எழுத்துருவில் 50%  நினைவுவைத்துக்கொள்ள முடியும் என்றால்,  புதிய எழுத்துருவான ‘சான்ஸ் ஃபார்காட்டிகாகா’வில் 57% நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது. இந்த எழுத்துருவினை உருவாக்க ஆறு மாதங்கள் ஆகியுள்ளன. பரிசோதனையின்போது மூன்று வெவ்வேறு வகையான மாதிரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து மெய்ப்பு வாசிப்பு உள்ளிட்ட பல நிலைகளில் இந்த எழுத்துரு சோதிக்கப்படவுள்ளது.

தேர்வு எழுதவுள்ள மாணவர்களை மனதில் வைத்தே இந்த எழுத்துரு உருவாக்கப்பட்டுள்ளன. எனினும், அயலக மொழிகளைக் கற்போருக்கும், நினைவாற்றல் இழந்த முதியோருக்கும்கூட இது உதவும்.   இந்த எழுத்துருவானது இடது புறத்தில் ஏழு டிகிரி பின்சாய்ந்த நிலையில், எழுத்துகளுக்கிடையே இடைவெளியுடன் காணப்படுகிறது.  பெரும்பாலான வாசகர்களுக்கு பிற்சாய்வுநிலை அமைப்பிலான எழுத்துரு புதிதாக இருக்கும். படிப்பதற்குச் சிரமம் இருப்பது போலத் தெரியும். படிக்கத் தாமதமாகும்போது இயல்பாக நினைவாற்றல் அதிகமாகிறது.

 நினைவைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவே இந்த வேகத்தடுப்பு சேர்க்கப்படுகிறது. வேகத்தடுப்பிற்கும் வாசிக்கப்படும் உரைக்கும் ஒரு சரியான  சம நிலையை இந்த எழுத்துரு சிறப்பாகச் செய்கிறது. அப்போது நினைவுத்திறன் மேம்படுகிறது.

இந்த எழுத்துருவில் அச்சிடப்பட்ட  ஒரு நூலினை ஒருவர் படிப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த எழுத்துருவில் ஒவ்வொரு சொல்லையும் வாசிக்க ஒரு வாசகருக்கு அதிக நேரமெடுக்கும். செலவழிக்கப்படுகின்ற அந்த நேரத்தில் மூளையானது தகவலை தகவமைத்துக்கொள்வதற்கு வாய்ப்பு தரப்படுகிறது. எழுதும்போது உரிய வடிவத்தை நிறைவு செய்ய மனம் முயற்சிக்கும்போது வாசிப்பின் வேகம் குறைந்து நினைவாற்றலின் வேகம் அதிகரிக்கிறது. இது மாயமல்ல. முயற்சியின்பாற்பட்ட அறிவியல்.

இப்போதுதான் முதன்முறையாக வடிவக் கோட்பாட்டோடு உளவியல் கோட்பாடும் இணைந்து ஒரு எழுத்துரு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்துருவினை sansforgetica.rmit என்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வசதி உள்ளது. வழக்கமாக உள்ள எழுத்துருக்களை எதிர்கொண்டு இந்தப் புதிய எழுத்துரு வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்