இயக்கமாகட்டும் வனமீட்பு!

By ஜூரி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையையொட்டி 240 ஹெக்டேர் பரப்பில் விரிந்திருக்கிறது சந்தவாசல் வனப்பகுதி. 20 ஆண்டுகளுக்கு முன்னால் வாடி வதங்கி, வறண்டுகிடந்த பகுதி இது. கணக்கின்றி மரங்கள் வெட்டப்பட்டன. வரையறை இல்லாமல் மேய்ச்சல் அனுமதிக்கப்பட்டது. விவசாயத்துக்கும் எந்த வரையறையும் இல்லை. கடைசியில், எல்லாம் சேர்ந்து வனப்பகுதியை அழியும் நிலைக்குத் தள்ளிவிட்டது. பல்லுயிர்கள் பெருக்கமும் தடைப்பட்டது.

வனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, வெகு ஆழத்துக்குச் சென்றது. கிடைத்த தண்ணீர் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் பயன்படவில்லை. இதற்குப் பிறகுதான் கிராம மக்களும் வனத் துறையும் விழித்துக்கொண்டனர். டிவிஎஸ் தொழில்குழுமத்தின் சீனிவாசன் சேவை அறக்கட்டளையுடன் தமிழ்நாடு வனத் துறை கைகோத்தது. தமிழ்நாடு வன வளர்ப்புத் திட்டத்தின் கீழ் திட்டம் தீட்டப்பட்டது.

வனப்பகுதிக்கு அருகிலுள்ள ஐந்து கிராமங்களைச் சேர்ந்த 640 தன்னார்வலர்கள் 1999-ல் இந்தத் திட்டத்தில் இணைந்தனர். ‘இயற்கைக்கு நெருங்கிய மீள்துளிர்ப்புத் திட்டம்’ என்ற புதிய முறை கையாளப்பட்டது. வனப் பரப்பு மட்டுமல்லாது, அதைச் சுற்றியுள்ள பிற பகுதிகளையும் சேர்த்து மொத்தம் 4,000 ஹெக்டேர் நிலங்களில் இது மேற்கொள்ளப்பட்டது.

உள்ளூர் சூழலில் வளரும் மரம், செடி, கொடி, புதர்கள் வளர்க்கப்பட்டன. யூகலிப்டஸ் நடுவது தவிர்க்கப்பட்டது. மழை நீர் தேங்குவதற்காக வனப்பரப்பில் ஆங்காங்கே ஆழமான குழிகளும் வெட்டப்பட்ன. மழை நீர் வெளியேறாமல் இருக்க வனப் பரப்பைச் சுற்றிலும் கரைகள் அமைக்கப்பட்டன. இதனால் மண் அரிப்பு தடுக்கப்பட்டதோடு, மழை நீர் தேங்கி நீர்மட்டமும் உயர்ந்தது.

இப்போது மரம், செடி, கொடிகள் மட்டுமின்றி பூச்சியினங்கள், வண்டுகள், பறவைகள், விலங்குகள் ஆகியவையும் பெருகியுள்ளன. வனப்பகுதியில் நீர்மட்டம் உயர்ந்திருப்பதால், அருகிலுள்ள கிராமங்களில் மீண்டும் கரும்பு விவசாயம் செய்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

மக்கள், அரசு, சேவை நிறுவனங்கள் கைகோத்து நடந்த இந்த வனமீட்பு இயக்கம், தனது நோக்கத்தை 20 ஆண்டுகளில் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. அழிவின் விளிம்பிலிருக்கும் ஒவ்வொரு வனப்பகுதியிலும் முன்னெடுக்கப்பட வேண்டிய இயக்கம் இது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்