பத்திரிகை துறை என்பது சவால் களும் சந்தோஷமும் நிறைந்த துறைதான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் உலகின் சில பகுதி களில் பத்திரிகையாளர்கள் வேட்டை யாடப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார் கள். சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அவர்கள் எப்போதும் இல்லாத வகை யில் மோசமான பகையை சந்தித்து வருகிறார்கள் என ‘ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்’ (ஆர்எஸ்எப்) என்ற அமைப்பு கூறியுள்ளது. கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் கொலைகளும் பிணைக்கைதிகளாக பிடிப்பதும், ஆளையே காணாமல் போகச் செய்வதும் அதிகரித்துள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இந்த ஆண்டில் 80 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 61 சதவீதம் பேரை குறிவைத்து நடந்த தாக்குதலில் 39 சதவீதம் பேர் கொல்லப்பட்டனர். உலகம் முழுவதும் 348 நிருபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 60 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர் என ஆர்எஸ்எப் கூறியிருக்கிறது. ஆப் கானிஸ்தான் தான் ரொம்ப மோசம். முதலிடத்தில் இருக்கிறது. இந்தியா 5-வது இடத்தில் இருக்கிறது. இங்கு 6 பத்திரிகையாளர்கள் கடந்த ஆண்டில் கொல்லப்பட்டனர். போர் நடக்காத நாடு களில்தான் பத்திரிகையாளர்கள் கொல்லப் படுவது அதிகமாக இருக்கிறது. முதன் முறையாக அமெரிக்காவில் இந்த ஆண்டு 6 பத்திரிகையாளர்கள் கொல்லப் பட்டுள்ளனர். கடந்த ஜூனில் மேரிலாண்டில் பத்திரிக்கை அலுவலகத்திலேயே 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் வடக்கு கரோலினாவில் மோசமான வானிலை தொடர்பான செய்தியை சேகரிக்கும்போது பலியாயினர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள பத்திரிகை யாளர்களில் பாதிக்கு மேல் சீனா, எகிப்து, துருக்கி, ஈரான், சவுதி அரேபியா நாடுகளில் இருக்கிறார்கள்.
பத்திரிகையாளர்களை பாதுகாக்கும் கமிட்டியும் (சிபிஜே) இதேபோன்ற அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதன்படி, 2018-ல் மொத்தமுள்ள 53 பத்திரிகையாளர்களில் 34 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 47 பேர் கடந்த ஆண்டில் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் இது மிகவும் அதிகமாகும். இதிலும் ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு இந்த ஆண்டில் மட்டும் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ரவுடி அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் மற்றும் பேராசை பிடித்த தொழிலதிபர்கள் ஆகியோர் பத்திரிகையாளர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் பேசுவதால்தான் பத்திரிகையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என ஆர்எஸ்எப் அமைப்பின் பொதுச் செயலாளர் கிறிஸ்டோப் டெலாய்ர் கூறியிருக்கிறார்.
ஒரே ஆறுதலான விஷயம், இந்த ஆண்டில் உள்நாட்டுக் கலவரம், போர் நடக்கும் பகுதிகளில் இறந்த பத்திரிகை யாளர்களின் எண்ணிக்கை குறைந்துள் ளது. சிரியாவிலும், ஏமனிலும் போர் நடந்தபோதும் இந்த நிலை. உண்மை யில் போர் நடக்கும் பகுதிகளில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படுவ தில்லை என்பதும் அந்தப் பகுதிகளுக்குப் போகாமல் பத்திரிகையாளர்கள் தவிர்ப்பதும்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். அப்படியும் இந்த ஆண்டில் இதுவரை 11 பேர் இறந்துள்ளனர்.
ஆர்எஸ்எப் மற்றும் சிபிஜே அறிக்கைகளில் வித்தியாசம் இருக்கலாம். அது இங்கே பிரச்சினை இல்லை. ஆனால், பத்திரிகையாளர்களை சுட்டுக் கொல்லும் நாடுகள் மற்றும் தீவிரவாத தலைவர்களை கேள்வி கேட்க யாருமில்லை என்பதுதான் பிரச்சினை. உலக அளவில் இந்தக் கொடுமையை தட்டிக் கேட்க பெரிய தலைவர்கள் யாருமில்லை. ஒருவகையில் பார்த்தால், உலகத் தலைவர்கள் பத்திரிகையாளர் களை மோசமாக தாக்கிப் பேசுவதால்தான் இந்த அளவுக்கு தாக்குதல் நடத்த யாருக்கும் தைரியம் வருகிறதோ என்ற சந்தேகமும் இருக்கிறது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒருபக்கம் பத்திரிகை சுதந்திரத்தின் அவசியம் குறித்து பேசுகிறார். மறுபக்கம் பொய் செய்திகள் என்றும் பத்திரிகையாளர்களை மக்களின் விரோதிகள் என்றும் தினமும் வசைபாடுகிறார். துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் கடந்த அக்டோபர் மாதம் சவுதி தூதரகத்தில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஸோகி குறித்து தினமும் புதுப்புது தகவல்களை வெளியிட்டு வருகிறது துருக்கி அரசு. இதனால் இந்த செய்தி சர்வதேச அளவில் தலைப்பு செய்தியாக இருக்கிறது. பத்திரிகையாளர்கள் மீது பாசம் எல்லாம் கிடையாது துருக்கிக்கு. அரசியல் லாபத்துக்குக்காகத்தான் இதை செய்து வருகிறது.
படுகொலைகள் ஒருபுறம் இருக்க, மேற்கத்திய ஜனநாயக நாடுகளிலும் மற்ற பகுதிகளிலும் பத்திரிகையாளர்கள் தங்கள் கடமையைச் செய்வதே கடினமாகி வருகிறது. தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தீவிரவாதத்துக்கு எதிரான போர் காரணமாகவும் இந்த நிலை. பத்திரிகையாளர்கள் சுட்டுக் கொல்லப்படுவதும் படுகொலை செய்யப்படுவதும் நிறுத்தப்பட வேண்டும். இந்த விஷயத்தில் பெரிய அரசியல் தலைவர்கள் தலையிட்டால்தான் முன்னேற்றம் ஏற்படும்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago