ஒடுக்கப்பட்ட பெண்களின் குரல்களும் ஒலிக்கட்டும் - ராய சர்க்கார் பேட்டி

By நந்தினி வெள்ளைச்சாமி

ராய சர்க்கார் - அமெரிக்காவில் 2006-ல் தாரனா பூர்க் என்ற சமூகச் செயல்பாட்டாளரால் தொடங்கப்பட்ட ‘நானும்’ இயக்கம், இந்தியாவில் 2018-ல் தொடங்கி வேகமெடுப்பதற்கு முக்கியக் காரணமானவர். அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்டத் துறை மாணவியான ராய சர்க்கார், இந்திய உயர்கல்வித் துறையில் தங்களுடைய மாணவிகளைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்படும் பேராசிரியர்களின் பட்டியலை 2017-ல் வெளியிட்டார். அவரைத் தொடர்ந்து பல மாணவிகளும் தங்களைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்திய பேராசிரியர்களின் பெயர்களை வெளியிட்டனர். இப்படித் தொடங்கிய ‘நானும்’ இயக்கம்தான் இன்று திரைத் துறை, ஊடகத் துறை என்று பரவிவருகிறது.

எந்தத் தருணத்தில் அத்துமீறியவர்களின் பெயர்களை வெளியிட முடிவெடுத்தீர்கள்? நீங்கள் பட்டியலை வெளியிட்டவுடன் இந்தியா முழுவதும் அதுவொரு இயக்கமாக மாறும் என யூகித்தீர்களா?

அது ஒரு உணர்ச்சிவயப்பட்ட நிலையில் எடுக்கப்பட்ட முடிவுதான். இந்தியப் பல்கலைக்கழகங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதை நினைத்துக் கோபம் அடைந்திருந்த தருணத்தில்தான் அந்த முடிவை எடுத்தேன். வெளிநாடுகளில் நடைபெற்ற ‘மீடூ’ இயக்கம்தான் கல்வித் துறையில் பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் ஆண்களின் பட்டியலைத் தயாரிக்க வைத்தது. நான் வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களின் கோபத்துக்கு நான் ஆளாக நேர்ந்தது என்றாலும், அந்தப் பட்டியல், இன்று இப்படியொரு இயக்கமாக உருமாறும் என நான் நினைக்கவில்லை.

உங்களால் கடந்த ஆண்டு இந்தியாவில் தொடங்கிய ‘மீடூ’ இயக்கத்துக்கும் தற்போது பாலிவுட், ஊடகம் எனப் பல்வேறு துறைகளில் நடைபெறும் ‘மீடூ’ இயக்கத்துக்கும் ஏதேனும் வேறுபாடு இருப்பதாக நினைக்கிறீர்களா?

நான் முன்னெடுத்ததும், இப்போது நடக்கும் ‘மீடூ’ இயக்கமும் ஒன்றுதான். இரண்டிலும் பாதிக்கப்பட்ட பெண்கள் தாங்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களைப் பொதுவெளியில் பகிர்கிறார்கள். அதன் மூலம் தங்களைத் துன்புறுத்திய ஆண்களுக்கு ஓர் எச்சரிக்கையை விடுக்கிறார்கள். இப்போது நடக்கும் ‘மீடூ’ இயக்கத்தில் பெண்கள் கூறுவதை மற்றவர்கள் கவனிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், தற்போது நிறுவனமயமாக்கப்பட்ட துறைகளுக்கு மட்டுமே ‘மீடூ’ என்ற எல்லை உள்ளதாக நினைக்கிறேன். அதை விடுத்து, ஒழுங்குபடுத்தப்படாத துறைகளில் பணிபுரியும் பெண்களின் பாலியல் புகார்களையும் கேட்க வேண்டும். மேலும், ஒடுக்கப்பட்டவர்களின் குரல்களும் இதில் இணைய வேண்டும்.

இதிலும், குற்றம்சாட்டும் பெண்களையே புகார் கூறும் போக்கும் இருக்கிறதே?

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளியே சொல்வதால் அவர்களுக்குக் குற்றவுணர்வை ஏற்படுத்த மற்றவர்கள் கையாளும் ஒரு பழைய உத்திதான் இது. அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை.

இப்படியான சூழலை மாற்றுவதற்கான சட்டம் இந்தியாவில் வலுவாக இருப்பதாக நினைக்கிறீர்களா?

இல்லை. இருந்தால், பாலியல் குற்றஞ்சாட்டும் பெண்கள் மீதே எப்படி அவதூறு வழக்குகளைத் தொடுக்க முடியும்? அவதூறு வழக்கு என்பது பிரிட்டிஷ் காலத்திய சட்டம். எதிர்க்குரல்களை மிரட்டுவதற்காகவும், ஒடுக்குவதற்குமான சட்டம் இது. பொதுவெளியில் தங்கள் அனுபவங்களைப் பகிரும் பெண்களுக்கு உதவும் வகையில் இந்தியாவில் நீதித் துறை மாற்றம் அடைதல் வேண்டும். அதற்கேற்ற வகையில் சட்ட மாற்றங்கள் அவசியம்.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

14 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

20 days ago

கருத்துப் பேழை

23 days ago

மேலும்