இந்தியாவுக்கு நீட், சீனாவுக்கு காவ்கோ!

By வெ.சந்திரமோகன்

லகில் மிகப் பெரிய அளவில் நடக்கும் தேர்வான சீனாவின் ‘தேசிய உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வு’ (காவ்கோ) முடிவுகள் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பப்பட்டிருக்கின்றன. மாவோ ஆட்சிக்காலத்தில் தடைசெய்யப்பட்ட இந்தத் தேர்வு முறை, 1977-ல் அவரது மறைவுக்குப் பிறகு மீண்டும் அமல்படுத்தப்பட்டது.

மேற்கத்திய நாடுகளின் வேலை தேவை களுக்கு ஏற்ப மாணவர்களைத் தயாரிக்கும் தேர்வு இது என்ற குற்றச்சாட்டு இதன் மீது உண்டு. மேற்கத்திய பல்கலைக்கழகங்களும் இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு இடம் அளிக்கத் தயாராக உள்ளன. இதனால், தங்கள் குழந்தைகள் எப்படியேனும் இந்தத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று பயிற்சி வகுப்புகளில் சேர்த்துவிடுகிறார்கள் சீனப் பெற்றோர்கள். இந்தத் தேர்வின் சந்தை மதிப்பு 120 பில்லி யன் டாலர்கள். சீன இளைஞர்களின் எதிர்காலத் தைத் தீர்மானிக்கும் இந்தத் தேர்வு முறை, சீர் திருத்தப்பட வேண்டும் என்று குரல்கள் எழுந்திருக்கின்றன. காரணம், இளைஞர்கள் புத்தாக்கச் சிந்தனை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று சீனச் சமூகம் எதிர்பார்க்கும் சூழலில், அதற்குப் பொருத்தமான தரத்தில் கல்வி முறையும், காவ்கோ தேர்வு முறையும் இல்லை என்று பேசப்படுகிறது. இந்தத் தேர்விலிருந்து தப்பிக்க, வெளிநாடுகளுக்குச் சென்றுவிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேவருகிறது. மேலும், சீனாவில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பு வரை இலவசம். அதன் பின்னர், எல்லா படிப்புகளுக்கும் கட்டணம். இதனால், எத்தனையோ ஏழை மாணவர்கள் பள்ளிப்படிப்புடன் தங்கள் கல்வியைக் கைவிட வேண்டிய நிலை. இந் நிலையில் இப்படியான தேர்வுகள் மேலும் மேலும் சமூகத்தைப் பிளக்கும் என்பதால் எதிர் மனநிலை உருவாகியிருக்கிறது. பல திறமை களையும் கொண்ட குழந்தைகளின் படைப்பூக்கத்தை வெளிக்கொணரும் வகையிலான தேர்வுமுறைக்கான குரல்கள் வலுவடைகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்