லஞ்சத்தை ஒழிக்க வழி இருக்கிறது

By எம்எஸ்

லோக்கல் சர்க்​கிள்ஸ் என்ற அமைப்பு சமீபத்​தில் நாடு முழு​வதும் 159 மாவட்​டங்​களில் மேற்​கொண்ட ஆய்வில், 66 சதவீத வணிக நிறு​வனங்கள் அரசு சேவை​களைப் பெற லஞ்சம் கொடுத்​துள்ள தகவல் கிடைத்​துள்ளது. அரசுக்கு பொருட்களை விநி​யோகம் செய்ய, ஒப்பந்​தங்கள் மேற்​கொள்ள, ஒப்பந்​தங்​களுக்கு தகுதி பெற, நிறைவேற்றிய பணிகளுக்கு பணம் பெற என பல விஷயங்​களுக்காக அவர்கள் லஞ்சம் கொடுத்​துள்ளனர்.

18 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில், 54 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்​துள்ளதாக தெரி​வித்​துள்ளனர். இந்த செய்தி​யைப் பார்த்து பொது​மக்கள் யாரும் அதிர்ச்சி அடைய மாட்​டார்​கள். ஏனென்​றால், அரசின் சேவை​களைப் பெற பல நேரங்​களில் ஒவ்வொரு​வரும் லஞ்சம் கொடுத்த அனுபவம் அவர்​களது நினை​வுக்கு வரும். அதேநேரம், 16 சதவீதம் பேர் லஞ்சம் எதுவும் கொடுக்​காமல் அரசின் சேவைகளை பெற்றுள்ளதாக தெரி​வித்​துள்ளனர். இந்த செய்தி பொது​மக்களை நிச்​சயம் அதிர்ச்​சி​யடையச் செய்​யும் என்ப​தில் சந்தேகமில்லை. லஞ்சம் கொடுக்​காமல் அரசு சேவைகளை பெற்​றவர்களை ஆராய்ந்​தால் அவர்கள் தங்களுக்கு இருக்​கும் ஏதாவது ஒரு செல்​வாக்கைப் பயன்​படுத்தி இருப்​பார்​கள். இந்த வாய்ப்பு அனைத்து பொது​மக்​களுக்​கும் கிடைக்​காது.

லஞ்சம் அதிகம் புழங்​கும் துறை​களாக பொதுப்​பணித்​துறை, போக்கு​வரத்து, மின்​சா​ரம், சுகா​தா​ரம், பதிவுத்​துறை, வணிகவரி, கனிமவளம், மாநக​ராட்சி ஆகியவை குறிப்​பிடப்​படு​கின்றன. லஞ்சத்தை ஒழிப்பது குறித்து நீண்​ட​காலமாக பேசப்​பட்டு வருகிறது. ஆனால், எந்த துறை​யிலும் லஞ்சம் குறைந்​த​பாடில்லை. பொதுவாக பொது​மக்கள் நேரடியாக தொடர்​பு​கொள்​ ளும் துறை​களில்​தான் அதிக லஞ்சம் புழங்​கு​கிறது என்ற குற்​றச்​சாட்டு இருக்​கிறது. அதனால், பொது​மக்​களை​யும், அரசு அதிகாரி​களை​யும் சந்திக்க விடா​மல், இணைய வழியாக சேவை​களுக்கு விண்​ணப்​பித்து சான்​றிதழ்​கள், உரிமம், உத்தர​வுகள் உள்ளிட்​ட​வற்றை பெற்றுக் கொள்ள முடி​யும் என்ற வசதிகளை மத்திய, மாநில அரசுகள் உருவாக்கி உள்ளன. அதற்காக இ-சேவை மையங்கள் உருவாக்​கப்​பட்டு அரசு சேவை​களுக்கு விண்​ணப்​பிக்க வலியுறுத்​தப்​படு​கின்​றனர். ஆனால், பெரும்​பான்​மையான பணிகளுக்கு இ-சேவை மையங்கள் விண்​ணப்​பங்களை பூர்த்தி செய்​யும் இடங்​களாக மட்டுமே செயல்​படு​கின்றன.

பூர்த்தி செய்​யப்​பட்ட விண்​ணப்​பங்களை நகல் எடுத்​துக் கொண்டு மீண்​டும் சம்பந்​தப்​பட்ட துறை அதிகாரிகளை சந்திக்​கும்படி பொது​மக்கள் கட்டாயப்​படுத்​தப்​படு​கின்​றனர். அரசு அதிகாரிகளை சந்திக்​காமல் சேவையைப் பெற முடி​யாது என்ற நிலை​மைக்கு பொது​மக்கள் தள்ளப்​படு​கின்​றனர். இந்த நடைமுறை, இ-சேவை மையங்கள் கொண்டு வரப்​பட்​டதன் நோக்​கத்​தையே சிதைக்​கும் வகையில் உள்ளது. தொழில்​நுட்ப வசதிகளை இன்னும் மேம்​படுத்தி அரசு அதிகாரிகளை பொது​மக்கள் சந்திக்க வேண்டிய தேவையே இல்லாத நிலையை உருவாக்க வேண்​டும். ஒரு சேவையைப் பெற இ-சேவை மையத்​தில் விண்​ணப்​பித்​தால், அதன் முன்னேற்​றம், தற்போதைய நிலை, குறைகள் உள்ளிட்ட விவரங்கள் விண்​ணப்​பித்​தவர்​களுக்கு உடனுக்​குடன் வழங்​கப்பட வேண்​டும். குறைகள் இருந்​தால், குறுஞ்​செய்திகள் வாயிலாக தகவல் தெரி​வித்து சரிசெய்​யப்பட வேண்​டும். எக்காரணத்​தைக் கொண்​டும் விண்​ணப்​பித்த விவரங்களை எடுத்​துக் கொண்டு சென்று அதிகாரிகளை சந்​திக்​கும் நிலையை உரு​வாக்​கக் கூடாது. அந்த தொடர்பை துண்​டித்​தால் நிச்​ச​யம் லஞ்​சம் ஒழி​யும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்