தொழிலாளர் வைப்பு நிதி 3.0: புதிய முடிவுகளே நம்மை உயர்த்திப் பிடிக்​கும்!

By எம்எஸ்

தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் (இபிஎப்ஓ) ‘3.0’ என்ற நவீன திட்​டத்​தின்​கீழ் மிகப்​பெரும் மாற்​றங்களை செய்ய முன்​வந்​துள்ளது. இதன்​படி, வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்​துள்ளவர்​கள், தங்கள் கணக்​கில் இருந்து ஏடிஎம் மூலம் பணத்தை எடுத்​துக் கொள்​ளும் வசதியை வழங்கப் போவதாக வெளி​யிடப்​பட்​டுள்ள அறிவிப்பு மிகப் பெரிய மாற்​றத்தை ஏற்படுத்​தும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. நாட்​டில் 6 கோடிக்​கும் அதிகமான தொழிலா​ளர்கள் வைப்பு நிதி கணக்கு வைத்​துள்ளனர். இவர்கள் தற்போது, வீடு வாங்​குதல், திரு​மணம், பிள்​ளை​களின் கல்வி உள்ளிட்ட காரணங்​களைக் கூறி விண்​ணப்​பித்​தால் மட்டுமே அவர்​களது கணக்​கில் இருந்து பணத்தை எடுக்க முடி​யும் என்ற நிலை உள்ளது. இதில் விண்​ணப்​பிப்​ப​தில் உள்ள சிரமம், உரிய ஆவணங்களை சமர்ப்​பித்​தல், ஒப்புதல் கிடைப்​ப​தற்காக நீண்​ட​காலம் காத்​திருக்க வேண்டிய சூழ்​நிலை என பல்வேறு இன்னல்களை தொழிலா​ளர்கள் சந்தித்து வருகின்​றனர்.

ஆனால், தற்போது கொண்டு​வரப்​பட​வுள்ள மாற்​றத்​தின் மூலம், தொழிலா​ளர்கள் எளிதாக தங்கள் கணக்​கில் உள்ள பணத்தை வங்கிக் கணக்​கில் இருந்து பணம் எடுப்​ப​தைப் போன்று ஏடிஎம் வசதியை பயன்​படுத்தி எடுத்​துக் கொள்​ளலாம் என்பது மிகப்​பெரிய பொருளாதார சீர்​திருத்​தமாக கருதப்​படு​கிறது. இந்த புதிய வசதி, அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்​துக்​குள் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. தற்போது தொழிலாளர் வைப்பு நிதிக்கு 8.5 சதவீதம் வட்டி வழங்​கப்​படு​கிறது. தொழிலா​ளர்​களிடம் இருந்து அதிகபட்​சமாக சம்பளத்​தில் இருந்து 12 சதவீதம் பிடிக்​கப்​படு​கிறது. இந்த அளவை தொழிலா​ளர்கள் நினைத்​தால் அதிகப்​படுத்​திக் கொள்​ளும் வசதி​யை​யும் அறிமுகம் செய்ய திட்​ட​மிட்​டுள்​ளனர். இதுதவிர, தகவல் தொழில்​நுட்ப நவீனமய​மாக்​கும் திட்​டத்​தின்​கீழ், தொழிலாளர் ஓய்வூ​தியம் பெறும் 78 லட்சம் பேருக்​கும் இத்திட்டம் நீட்​டிக்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வைப்பு நிதி​யில் இருந்து தொழிலா​ளர்கள் பணத்தை எடுத்​துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை ஒரு லட்சத்து 57 ஆயிரம் கோடி ரூபாய் வரை பணம் பெற்றுள்ளதாக கூறப்​படு​கிறது. இந்த அளவுக்கு வரவு-செலவு நடைபெறும் துறை, நவீனமய​மாக்கல் மூலம் ஏடிஎம்-ல் நினைத்த நேரத்​தில் பணத்தை எடுத்​துக் கொள்​ளும் வசதியை கொண்டு​வருவது என்பது இந்திய பொருளா​தா​ரத்​துக்கே வலுசேர்க்​கும் நடவடிக்கையாக அமையும் என்ப​தில் சந்தேகமில்லை. பிரதமர் நரேந்திர மோடி​யின் தலைமையிலான அரசு, மிகப்​பெரிய பொருளாதார நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று அமெரிக்க தொழில் முதலீட்​டாளர் ஜிம் ரோஜர்ஸ் பாராட்​டி​யுள்​ளார். அவரது ஆட்சி​யில் கடந்த 10 ஆண்டு​களில் இந்தியா​வுக்கு 1,182 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கிடைத்​துள்ளது என்றும் அவர் பாராட்​டி​யுள்ளது இந்தியா​வின் பொருளா​தார நட​வடிக்கைகளுக்கு கிடைத்​துள்ள பாராட்டு பத்​திர​மாகும். இத்​தகைய பொருளா​தா​ரம் சார்ந்த பு​திய ​முடிவுகளே இந்தியாவை உலக அரங்​கில் உயர்த்திப்​ பிடிக்​கும்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்