நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரனின் வாழ்க்கை: ஹாங்காங்கில் உள்ள முகுந்த் வரதராஜனின் அக்கா நித்யா உருக்கம்!

By Guest Author

அமரன்... நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றிய திரைப்​படம். இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்று தாக்​கத்தை ஏற்படுத்​தினாலும், சில சர்ச்​சைகளும் ஏற்பட்டன. மேஜர் முகுந்த் பிராமண சமூகத்​தைச் சேர்ந்​தவர் என்ற தகவல் எந்த ஒரு காட்​சி​யிலும் இடம்​பெற​வில்லை. அதேநேரத்​தில் திரைப்​படத்​தில் முகுந்த் மனைவியாக நடித்​தவர் கிறிஸ்தவ பெண் என்ற தகவல் பல இடங்​களில் சித்தரிக்​கப்​பட்​டிருந்​தது. நடுநிலையான விமர்​சகர்​கள், பொது​மக்கள் இதுபற்றி கேள்வி எழுப்​பினார்​கள்.

ஆனால், ஜாதி, மதம் சார்ந்த அடையாளங்களை விடவும் நாடு முக்​கி​யம். நம் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த மகனுடைய வாழ்க்கை கதை வெளி​யானதன் மூலம் இன்றைய இளைஞர்​களுக்கு ஒரு உந்துதல் கிடைத்​தால், அதுவே போதும் என்று எண்ணியோ என்னவோ... முகுந்த் வரதராஜனின் பெற்​றோர் சாதி சர்ச்சை குறித்து எதுவும் பேசாமல் பரந்த மனதுடன் கடந்து சென்​றனர்.

முகுந்த் வரதராஜனின் அக்கா நித்யா ஹாங்​காங்​கில் வசிக்​கிறார். அவரிடம் தம்பியைப் பற்றி​யும் ‘அமரன்’ திரைப்​படம் குறித்​தும் உரையாடிய போது அவர் ஏராளமான விவரங்​களைப் பகிர்ந்து கொண்​டார். குடும்​பம், தம்பியைப் பற்றி நித்யா கூறிய​தாவது: தம்பியைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படமாக ‘அமரன்’ வெளிவந்தது குறித்து அப்பா, அம்மா, அக்கா​தான் கூறினார்​கள். ஆனால், அந்தப் படத்தை நான் பார்க்க​வில்லை. அதை பார்த்​தால் நான் மனதள​வில் நொறுங்கி​விடு​வேன். அதனால் படத்​தைப் பார்க்​கும் தைரியம் வரவில்லை.

முகுந்த்தை பொறுத்த வரையில் சிறு வயது முதலே ராணுவம்​தான் தனது வாழ்க்கை என்று முடி​வெடுத்​தவன். எனக்​கும் அந்த ஆசை இருந்​தது. விமானப் படையில் சேர வேண்​டும் என்று நினைத்​தேன். ஆனால், ராணுவத்​தில் சேரு​வதற்கான முகுந்த்​தின் உழைப்பு மிகப்​பெரியது. நன்றாக படித்து அதிக மதிப்​பெண் பெற்று​விட்​டால், வேறு உயர் பதவி கொண்ட வேலைக்கு போக சொல்​வார்கள் என்ப​தற்​காகவே, 70 மதிப்​பெண் வாங்​கும் அளவுக்கு பார்த்து கொண்​டான். ராணுவத்​தில் சேரு​வதற்காக பல கிலோ மீட்டர் தூரம் தினமும் ஓடுவான். கடினமாக பயிற்சிகள் செய்​வான். ராணுவத்​தில் சேரு​வதற்காக தவம் இருந்​தான்.
எல்லோருக்​கும் உதவும் எண்ணம் கொண்​ட​வன். மோட்​டார் சைக்​கிள் விபத்​தில் சிக்கிய நண்பனை மருத்​துவ​மனை​யில் சேர்த்து சிகிச்சை அளித்த பிறகு கூட்​டிவந்​தான். அந்த சம்பவங்கள் எல்லாம் கண்முன் இருக்​கின்றன. எப்போதும் நண்பர்கள் பலருடன் இருப்​பான். அவர்கள் ஒன்றாக வருகிறார்கள் என்றால், யாருக்கோ உதவி செய்துவிட்டு வருகிறார்கள் என்று​தான் அர்த்​தம்.

முகுந்த் நினைத்​தபடி ராணுவத்​தில் சேர்ந்த பிறகு, பயிற்சி காலத்​தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து நிறைய பேசுவோம். பயிற்​சி​யின் போது ஒரு முறை முகுந்த் உடலில் குண்டு பாய்ந்து விட்​டது. அது ஒரு விபத்தாக அமைந்​தது. இந்த தகவல் கூட திரைப்​படத்​தில் இருப்​பதாக கேள்​விப்​பட்​டேன். ஆனால், அந்த சம்பவத்​தால் இன்னொருவர் வேலை போய்​விடும் என்று அதை முகுந்த் மறைத்து​விட்​டான். அமரன் திரைப்​படம் எடுப்​ப​தற்கு முன் அப்பா அம்மா​விடம் பேசி​யிருக்​கிறார்​கள். முகுந்த்​தின் முழு அனுபவத்​தை​யும் வாழ்க்கை​யை​யும் கேட்​டுள்​ளார்​கள். அதேவேளை​யில் முகுந்த் மனைவி இந்து தான் படம் எடுக்​கும் திட்​டத்தை எடுத்து செய்​தார்.

முகுந்த் பெற்றோர் மற்றும் சகோதரிகளுடன் அவரது மனைவி இந்து (பின்புறம்)

எங்கள் அப்பா வெகுளி. முகுந்த்தை பற்றி யார் பாராட்டி பேசினாலும், அவர்களை ஆதரிப்​பார். முக்​கியமாக முகுந்த் பெயரில் எந்த பணம் வந்தா​லும் நாங்கள் வைத்​துக் கொள்​வ​தில்லை. எந்த நிகழ்ச்​சி​யில் மேஜர் முகுந்த் குடும்பத்​துக்கு நிதி​யுதவி என்று சொன்​னாலும் அந்த பணத்தை அங்கேயே நன்கொடையாக அப்பா கொடுத்து விடு​வார். திரைப்​படத்​தில் சில காட்​சிகள் பற்றி கேள்வி எழுப்பு​கிறார்​கள். ஆனால், திரைப்​படம் என்பது கற்பனை​யும் கலந்​தது​தான் என்பதை புரிந்து கொண்​டோம். மும்​பை​யில் நாங்கள் அடிக்கடி சந்திப்​போம். ஒரு முறை மார்க்​கெட் ஏரியா​வுக்கு நாங்கள் சென்​றோம். அப்போது “நீங்கள் இங்கு பார்க்​கும் நிலை வேறு; நான் இந்த இடத்​தைப் பார்க்​கும் கோணம் வேறு” என்று முகுந்த் சொல்​வான்.

ரஜினி​யின் தீவிர ரசிகன் முகுந்த். அதேநேரத்​தில் அன்பே சிவம் பற்றி அடிக்கடி பேசுவான். நல்ல சினிமா ரசிகனான முகுந்த்​தின் நிஜ வாழ்க்கையை பற்றிய திரைப்​படம் வெளிவரும் என்று அவன் நினைத்து பார்த்திருக்க மாட்​டான். முகுந்த் திரு​மணம் மிகப்​பெரிய கதை. எங்கள் வீட்​டில் எங்கள் விருப்​பத்​துக்கு எதிராக அப்பா, அம்மா இருந்​த​தில்லை. ஆனால், இந்து வீட்​டில் கடும் எதிர்ப்பு இருந்​தது. ஆனால், முகுந்​த்தின் தியாகத்தை இன்று நாடே கொண்​டாடும் போது அவர்​களும் கொண்​டாடு​கிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்​சியாக இருக்​கிறது. அவர்கள் வீட்​டில் முகுந்​த்தின் படத்தை மிகப்​பெரிதாக வைத்து பெரு​மைப்​படு​கிறார்​கள். எங்கள் வீட்​டில் கூட அந்தளவுக்கு முகுந்த்​தின் படம் இல்லை. நினைவு தாங்க முடியாத வலியை தரும் என்பது​தான் காரணம்.

முகுந்த் மீது இந்து உயிரையே வைத்​திருக்​கிறார். மறு கல்யாணத்​துக்கு அவர்கள் வீட்​டில் முயன்ற போது கூட திட்​ட​வட்​டமாக இந்து மறுத்து விட்​டார். ராணுவ​த்தினரும் இந்துவை நன்றாகவே பார்த்​துக் கொண்​டார்​கள். திரைப்​படத்​தில் சில விஷயங்களை மாற்றிக் காட்​டி​யிருக்​கிறார்​கள், மறைத்​திருக்​கிறார்கள் என்று பலர் சொல்​கிறார்​கள். என்ன செய்​வது. திரை மொழிக்காக சில விஷயங்கள் மாற்​றப்​பட்​டிருக்​கலாம். அது பற்றி சொல்லி என்ன பயன்? என் காது படவே முகுந்த் ராணுவத்​துக்கு எதற்கு போகணும் தேவை​யில்லாத வேலை என்று பேசி​ய​வர்கள் கூட இன்று முகுந்த் எங்கள் சொந்​தக்​காரன் என்று பெரு​மை​யுடன் பேசுகிறார்​கள். ஆனால் முகுந்த் இல்லை என்று நினைக்​கும் போது வரும் சோகம் அழுத்து​கிறது. இதிலிருந்து மீள முடிய​வில்லை.

ஒவ்வொரு முறை விடு​முறைக்கு வரும் போதும் அவன் தன் சாதனைகளை ஆர்வத்​தோடு சொல்​வான். ஆனால் அவனுக்கு சுவையான உணவு வகைகளை சமைத்து கொடுக்க வேண்​டும் என்ப​தில்​தான் என் கவனம் இருக்​கும். அக்கா, நான் முகுந்த் மூவரும் விடு​முறைகளை ஒன்றாகவே கழிப்​போம். நானும் முகுந்​தும் சேர்ந்து அக்காவை கலாய்ப்​போம். திரு​மணத்​துக்கு அப்புறம் கூட பேசி வைத்​துக் கொண்டு பிராங்க் செய்வது எங்கள் பொழுது போக்கு. திரு​மண​மாகி நாங்கள் பெற்​றோர்​களான போதும் ஒன்றாக கூடி குழந்​தைத்​தனமாக விளை​யாடுவது எங்களுக்கு ஒரு பொழுது​போக்கு. அப்படி ஒரு தருணத்​தில் பதிவு செய்தது தான் ஊஞ்சல் வீடியோ. ஒவ்வொரு விநாடி​யும் அவன் இல்லாததை உணர்ந்து மனது என்னவோ செய்​கிறது.

அப்பா​வின் சுசுகி பைக் ஓட்ட எனக்கு ஆசை. அப்படி ஒரு நாள் பைக் ஓட்டும் போது காரில் இடித்து விட்​டேன். அப்போது இனி பைக் ஓட்ட மாட்​டேன் என்று சொன்னேன். அதற்கு, “இந்த பயத்​துக்கு நீ அடிபணிந்து போனால், இனி பயத்தை நீ வெல்லவே முடி​யாது. துணிந்து நில். துணிந்து செல்” என்று முகுந்த் ஊக்கப்​படுத்​தினான். சொல்ல முடியாத அசாத்திய துணிவு. அதுதான் முகுந்த்.

தம்பி உயிரிழந்த தகவல் இரவு வந்தது. அதற்கு முன்பாக தினமும் கோயிலுக்​குப் போகும் என் அம்மாவுக்​கும் எனக்​கும் காலை​யில் இருந்தே எந்த காரண​மும் இல்லாமல் ஒரு சண்டை. ஏதோ சச்சரவு. இரண்டு பேரும் கோபித்​துக் கொண்டு அன்று முழு​வதும் பேசிக் கொள்​ளவே​யில்லை. தம்பியை இழக்க போவதற்கு இன்டியூஷனாக இருந்​திருக்​குமோ என்று இப்போது தோன்​றுகிறது. அம்மா இன்றும் சொல்​லிக் கொண்​டிருக்​கிறார். ஒரு வேளை அன்னிக்கு கோயிலுக்கு போயிருந்​தால் இந்த கெட்ட செய்தி நடந்​திருக்​காதோ. அந்த நாளை நினைத்​தால் இன்​றும் என் மன​தில் ஆறாத வலி இருந்து ​கொண்டே இருக்​கிறது. தூக்​கம் வர ​விடாத நிகழ்வு. இவ்​வாறு ​முகுந்த் வரத​ராஜனைப் பற்றி நித்யா கூறினார். ​முகுந்த்​தின் அதே துணிச்​சல், உறுதியை அவரிட​மும் பார்க்க ​முடிந்தது. மேஜர்​ ​முகுந்​த்​ வரதராஜனுக்​கான வீர வணக்​கத்​தை நித்​யா ​முன்​ சமர்ப்பித்தோம்.

- ஹாங்காங்கில் இருந்து... ராம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்