நீதித் துறையில் ‘ஏஐ’ - அறிவியல் தொழில்நுட்பம் மக்களுக்கு பயன்பட வேண்டும்!

By எம்எஸ்

செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் வழக்கறிஞர், நீதித்துறையில் தற்போதைய புதிய வரவாக உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஓய்வுபெறும் முன்பு டெல்லியில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய நீதித்துறை அருங்காட்சியகம் மற்றும் ஆவணக் காப்பகத்தை திறந்து வைத்தார். தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவும் அப்போது கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயங்கும் வழக்கறிஞர் அறிமுகம் செய்யப்பட்டார். அவரிடம் நீதிபதி சந்திரசூட், ‘‘இந்தியாவில் மரண தண்டனை சட்டப்பூர்வமானதா?’’ என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கிய வழக்கறிஞர், ‘‘ஆம். சட்டப்பூர்வமானதுதான். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கொடுங்குற்றச் செயல்களில் ஈடுபடும்போது அரிதினும் அரிதான வழக்குகளில் மரண தண்டனை வழங்கப்படுகிறது’’ என்று பதிலளித்தது, தலைமை நீதிபதி உள்ளிட்ட சட்ட நிபுணர்கள் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 5.1 கோடி வழக்குகள் தேங்கியிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வழக்குகள் 30 ஆண்டுகளை கடந்தவை. மொத்தமுள்ள வழக்குகளில் 87 சதவீதம், அதாவது 4.5 கோடி வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களில் விசாரணையில் இருந்து வருகின்றன. உச்ச நீதிமன்றத்தில் மட்டும் 80 ஆயிரத்து 221 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் மக்கள் தொகை அதிகரிக்கும்போது வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பது இயற்கையானதே.

அதேநேரம் வழக்கு தொடர்ந்து, விசாரணை முடிந்து நீதியை பெறுவதற்கான கால அவகாசம் பொதுமக்களை மலைக்க வைக்கிறது. வழக்குகள் பல காரணங்களால் நீதிமன்றங்களில் இழுத்தடிக்கப்படுகின்றன. இதற்கு நீதிபதிகள் மட்டுமே பொறுப்பாக முடியாது. அதேசமயம், மற்ற துறைகள் அனைத்தும் தொழில்நுட்ப வசதிகளில் முன்னேறிச்சென்று கொண்டிருக்கும்போது, நீதித்துறையும் புதிய தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை.

தற்போது நீதித்துறைக்கு கிடைத்துள்ள செயற்கை நுண்ணறிவு வழக்கறிஞர் வசதியை மேலும் விரிவுபடுத்தி, அனைத்து நீதிமன்றங்களிலும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், விரைந்து நீதி வழங்க மேலும் உதவிகரமாக இருக்கும். மேலும், சாமானிய மக்கள் நீதி பெறுவதற்காக மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களை நியமித்து, அவர்களுக்கு கட்டணம் செலுத்தும் அளவுக்கு வசதி படைத்தவர்களாக இல்லை.

பணம் செலவழிக்கும் தகுதி படைத்த அரசு அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் மட்டுமே உச்ச நீதிமன்றம் வரை சென்று நீதி பெறும் நிலை உள்ளது. நீதிமன்றங்களில் செயல்படும் இலவச சட்ட ஆலோசனை மையங்கள் குறைந்த அளவிலான மக்களுக்கே பலனளித்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவு வழக்கறிஞரை சாமானிய மக்கள் இலவசமாக பயன்படுத்தி, நீதிமன்றங்களில் வாதிடும் வகையில் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டியது அரசு மற்றும் நீதிமன்றங்களின் கடமை. செயற்கை நுண்ணறிவு வழக்கறிஞரின் அறிவுத்திறன் நீதிபதிகளுக்கேகூட சில நேரங்களில் உதவியாக அமையும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்