நாற்றுப் பறிப்பும் நடவும் காவிரிப் படுகைக்குக் கிட்டத்தட்ட மறந்துவிட்டது. புழுதியாக உழுது விதையைத் தெளித்துவிடும் இன்றைய சாகுபடி முறை என்பது நாற்பதே ஆண்டுகளில் உருவான மாற்றம். இந்தப் புனல் நாடு இரண்டாயிரம் ஆண்டுகளாகவே நடவைத் தவிர வேறு முறையை அறியாது. இப்போது நடவை மறந்து மானாவாரிக்குப் பழக்கமான தெளிப்புக்கு மாறியது. புரட்சிகளின் தன்மையே இதுதான்; அவை சொல்லிக்கொள்ளாமல் வந்துவிடும்.
மிகைப் பேச்சின் கவர்ச்சிக்காக நான் இப்படிச் சொல்லவில்லை. வடகோடி வீராணம் ஆயக்கட்டிலிருந்து தெற்கு எல்லையான கல்லணைக் கால்வாய் வரை இப்போது தெளிப்பு முறைதான். இதற்குத் ‘தெளி’ என்று ஒரு பெயர்ச்சொல்லும் மொழியில் சேர்ந்துகொண்டது. திட்டுத்திட்டாக மட்டுமே சில இடங்களில் இன்னும் நடவு இருக்கலாம். குறுவைக்கும் கோடைச் சாகுபடிக்கும் சேற்று உழவு செய்கிறார்கள். அங்கேயும் நேராகத் தெளித்துவிடும் சேற்று விதைப்புதான். இந்த முறை மாற்றத்தை அரசாங்கம் மானியம் கொடுத்து ஊக்குவிக்கவில்லை. இது விவசாயிகள் தாங்களாகவே கண்ட வழி. காவிரிக் கரையின் கலாச்சார வலுவைத்தான் இதற்குக் காரணமாகக் கூற வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago