அ
றுவை சிகிச்சைக்காக ஒருவர் எத்தனைக் காலம் காத்திருக்கலாம்? டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக ஆண்டுக் கணக்கில் காத்திருக்கிறார்கள் நோயாளிகள். இதயத்தில் ஓட்டை இருப்பதால், அறுவை சிகிச்சை தேவைப்படும் ஆறு மாதக் குழந்தைக்கு 2023-ல்தான் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துவிட்டது. “தனியார் மருத்துவமனைகளில் பெரிய அளவில் செலவாகும். என்ன செய்வது, என் குழந்தையைக் காப்பாற்ற நான் கடன் வாங்கித்தான் தீர வேண்டும்” என்று புலம்புகிறார் அந்தப் பெண் குழந்தையின் தந்தை.
எய்ம்ஸ் மருத்துவமனையைப் பொறுத்தவரை, பல ஆண்டுகளாகவே தொடரும் பிரச்சினை இது. புற்றுநோய், மூளையில் கட்டி போன்ற பாதிப்புகளுடன், இம்மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காகத் காத்திருந்து, கடைசி நேரத்தில் வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் பலர். எதிர்பாராத செலவால் பெருமளவில் கடன் வாங்க நேர்ந்தவர்களின் கதைகளும் ஏராளம். அம்மருத்துவமனைக்குத் தினமும் 10,000 புறநோயாளிகள் வருகிறார்கள். 2,000 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவ மனைகளின் மருத்துவர்கள், அறுவை சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு நோயாளிகளைப் பரிந்துரைப்பதால்தான் இந்தச் சிக்கல் ஏற்படுகிறது என்கிறார்கள் எய்ம்ஸ் மருத்துவர்கள். நாடு முழுவதும் ஏழே இடங்களில்தான் எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன. எல்லா முக்கிய நகரங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் இருந்தால் இதுபோன்ற பிரச்சினைகள் குறையும்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago