தனித்துவ அடையாளங்கள் | சிந்துவெளி நூற்றாண்டு

By நேயா

செங்கல்: சிந்துவெளி அகழாய்வில் கிடைத்த முதல் தொல்பொருள் செங்கற்கள்தான். சுடப்பட்ட, நவீன வடிவிலான இந்தச் செங்கற்கள் அனைத்தும் ஒரே அளவில் கிடைத்தன. கிட்டத்தட்ட அரையடி நீளம், அதில் பாதி அகலம், அதிலும் பாதித் தடிமனை இவை கொண்டிருந்தன. சிந்துவெளி நாகரிகம் பரவியிருந்த பகுதி முழுவதும் இதுபோன்ற செங்கற்களே கிடைத்தன. எனவே, அவை ஒரு குழுவால் தரப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

பெருங்குளம்: மொகஞ்சதாரோவில் மிகப் பெரிய குளம் ஒன்று இருந்திருக்கிறது. உடை மாற்றும் இடங்கள், படிக்கட்டுகள், கரைப்பகுதிகள் ஆகியவை இதில் உண்டு. சிந்துவெளி நாகரிகத்திலும், பண்பாட்டிலும் நீர் முதன்மை இடம் பிடித்ததற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க சான்று. திராவிடச் சடங்குகள் நீரை மையமாகக் கொண்டு நடப்பதை வைத்துப் பார்க்கும்போது, இந்தப் பெருங்குளம் உருவாக்கப்பட்டதன் தொடர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE