அன்றாடமும் சமூக வாழ்வும் - 1: அன்றாடமும் இயற்கையும்

By ராஜன் குறை

அன்றாடம் என்பதே இயற்கையின் காலப்பரிமாணம் ஆகும். நினைவுச் சேகரம், அறிவுச் சேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை மானுடம் உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.

அன்​றாடம் என்றால் என்ன? அது பூமியின் சுழற்​சி​தான். அதனால் பூமியின் பெரும்​பாலான பகுதி​களில் இரவும் பகலும் மாறிமாறி வருகின்றன. சூரியன் ஒரு முறை உதிப்​ப​திலிருந்து மறுமுறை உதிப்​பதுவரை ஒரு நாளாகப் புரிந்​து​கொள்​ளப்​படும். பூமி ஒருமுறை சுழன்று முடித்து​விட்டதை அது குறிக்​கிறது. கணிசமான உயிரினங்கள் இருளில் உறங்கும். சூரிய வெளிச்​சத்தில் இயங்கும். மனிதர்கள் குறிப்பாக அவ்விதம் பழக்கப்​பட்​ட​வர்கள். அதற்கு முக்கியக் காரணம், பகலில் வெளிச்சம் இருப்​பதால் இயங்குவது எளிது; இருளில் இயங்குவது கடினம் என்பதாகப் புரிந்​து​கொள்​ளலாம். ஒரு சில உயிரினங்கள் இரவில் அதிகம் இயங்கலாம்; வேறு சில இரவு, பகல் இரண்டிலும் இயங்கலாம் அல்லது இரவுக்கும் பகலுக்​குமான மாறுபாட்டை அறியாமல்கூட இயங்கலாம். நுண்ணுயி​ரி​களுக்கு இந்த வேறுபாடு புலப்​படாமல் இருக்கச் சாத்தியம் உண்டு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE