எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை எல்லோருக்கும் கிடைப்பது எப்போது?

By கு.கணேசன்

இந்​தி​யா​வில், புற்றுநோய் பாதிப்பு​களும் எலும்பு மஜ்ஜை சார்ந்த பாதிப்பு​களும் ஆண்டு​தோறும் அதிகரித்து ​வரு​வ​தாகத் தேசியப் புள்ளி​விவரங்கள் தெரிவிக்​கின்றன. குறிப்பாக, இவ்வகைப் பாதிப்பு​களுக்கு குழந்தைகள் அதிகம் உள்ளாவ​தாகத் தெரிகிறது. பயனாளிக்கு உரிய விழிப்பு​ணர்வு இருந்து, தேவையான மருத்துவச் சிகிச்​சைகளும் உரிய நேரத்தில் கிடைக்​கு​மானால், இந்தப் பாதிப்புகளை ஆரம்பநிலை​யிலேயே தவிர்க்​கலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

எலும்பு மஜ்ஜை என்பது எது? ஓர் எலும்​பானது வெளியி​லிருந்து பார்ப்​ப​தற்கு இரும்புக் கம்பி போன்று கடினப் பொருளாகத் தெரிந்​தா​லும், அதன் மையத்தில் குழல் போன்ற ஒரு பகுதியும் (Medullary cavity) உள்ளது. இதில் ‘எலும்பு மஜ்ஜை’ (Bone marrow) உள்ளது. இது மென்மையான திசுக்​கூழ். எலும்பு மஜ்ஜையில் ‘சிவப்பு மஜ்ஜை’, ‘மஞ்சள் மஜ்ஜை’ என இரண்டு வகை உண்டு. சிவப்பு மஜ்ஜை ரத்தச் சிவப்​பணுக்கள், வெள்ளணுக்கள், தட்டணுக்கள் ஆகியவற்றை உற்பத்​தி​செய்​கிறது. மஞ்சள் மஜ்ஜை கொழுப்பைத் தன்னிடம் சேமித்து​வைக்​கிறது. எலும்பு மஜ்ஜையில் ஸ்டெம் செல்கள் (Stem cells) இருக்​கின்றன. இவைதான் உடல் செல்கள் அனைத்​துக்கும் ஆதார செல்கள். இவை வளரும்போது பல்வேறு திசுக்​களின் செல்களாகப் பிரிந்து, வெவ்வேறு உறுப்புகளை உருவாக்கு​கின்றன. புற்றுநோய் உள்ளிட்ட ஏதாவது ஒரு நோயின் தாக்குதலால் எலும்பு மஜ்ஜை பாதிக்​கப்​படு​மானால், அப்போது ஆரோக்​கியமான ஸ்டெம் செல்களை அது உருவாக்​காது. ரத்த அணுக்​களின் உற்பத்தி பாதிக்​கப்​படும். உடலின் பிற உறுப்பு​களும் இதனால் செயலிழக்​கும். இந்தச் சூழலில், ஆரோக்​கியமான நபரிட​மிருந்து எலும்பு மஜ்ஜையைப் பெற்று, பாதிக்​கப்பட்ட நபருக்குச் செலுத்​தப்​படும் சிகிச்சை முறைக்கு ‘எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை’ (Bone Marrow Transplantation) என்று பெயர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

மேலும்