‘சி
ல்வர்’ சீனிவாசன் என்கிற 84 வயது முதியவர் ஒருவர் அண்மையில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். கைதுக்குக் காரணம் திருட்டு. ‘சில்வர்’ சீனிவாசன் என்ற பெயருக்குக் காரணம் அவர் வெள்ளி மட்டுமே திருடுவார் என்பது. திருட்டுக்குக் காரணம் வசதியான வாழ்க்கை என்ற எண்ணமில்லை; வயிறு. நான்கு இட்டிலிகள்– தயிர்ச் சோறு – நான்கு இட்டிலிகள்.
ஒருநாள் உணவை ஒழிஎன்றால் ஒழியாய்;
இருநாளைக்கு ஏல்என்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோவு அறியாய்; இடும்பைகூர் என் வயிறே!
உன்னோடு வாழ்தல் அரிது.
ஔவை கிடக்கட்டும். வயிற்றுப் பாட்டுக்குத் திருடுவதுதான் தீர்வென்று வைத்துக் கொண்டாலும்கூட, ஐயாவு வெள்ளிதான் திருடுவாரோ? கணக்கிருக்கும்போலத் தெரிகிறது. திருடுகிற அளவுக்கு வெள்ளிப் பாத்திரங்களைப் புழக்கத்தில் வைத்திருக்கிறவர்கள் வயதானவர்கள்; மென்மையானவர்கள்; பாய்ந்து விட மாட்டார்கள். பிடிபட்டால் பார்த்துக்கொள்ளலாம். திருட்டில் அவருக்கு முறைமைகள் உண்டு. தங்கம் திருடுவதில்லை. திருடினாலும் அற்பமாகவே திருடுவார். ஏனெனில் தங்கம் ஒரு குடும்பத்தின் சேமிப்பு; ஒட்டுமொத்தமாகத் திருடினால் குடும்பம் அழித்துவிடும். வெள்ளி அப்படியல்ல. மொத்தமாகத் திருடினாலும் குடும்பம் தாங்கும். தன் சாதியினரிடம்தான் திருடுவார். திருட்டிலும்கூடவா சாதியுணர்ச்சி? கி.ரா.வின் நாட்டுப்புறக் கதை ஒன்று: கும்மிருட்டில் திருட வந்தவனை வீட்டுக்காரர் கண்டுபிடித்துவிட்டார். எப்படியாம்? வேற்றுக் ‘குசு’ வீச்சம் அடித்ததாம்.
சீனிவாசன் சாதி பார்த்ததற்குக் காரணம் பற்று அன்று; பழிவாங்கல். அதற் கொரு பின்கதை உண்டு: முதல்முறை பிடிபட்டபோது நாணினார். விடுதலை யான பிறகு தன் சாதியாரின் மடத்தை அணுகித் தன் குற்ற நடவடிக்கையை அறிக்கையிட்டு, ‘இனி நேர்மையாகவே வாழ விரும்புகிறேன்; வேலை தந்து ஆதரியுங்கள்’ என்றார். மடத் தலைவர் அவரை நாணங்கெடப் பேசி விரட்டிவிட் டார். சீனிவாசன் 14-லிருந்து 84 வரை 70 ஆண்டுகள் திருடிப் பிளாட்டின விழாத் திருடராக நிலைத்துவிட்டார். நாணம் நல்ல குணம். கோடரியுங்கூடக் கதலித் தண்டுக்கு நாணுமாம். எல்லோரிடத்திலும் இருக்கிற நாணம் சிலரிடத்தில் சிலைபோலத் துலங்கி நிற்கலாம்; சிலரிடத்தில் கல்போல இருண்டு கிடக்கலாம். இருண்டு கிடப்பதைச் செதுக்கிவிடும்போது துலங்கி வருவது தெய்வமாகவும்கூட ஆகலாம். செதுக்கத் தெரியாமல் கொத்திக்கொண்டே இருந்தால் கடவுளை வைத்திருக்கும் கல்லானாலும் சிதைந்து சல்லிக்கல் ஆகலாம். நாணம் மரத்துப் போகுமாறு பகடி செய்து மக்களை மக்கட் பதடியாக்குகிறவர்கள் அருள்கூர்க. @ மீம்சுகள் போடும் மாம்சுகள்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago