த
மி
ழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் புதிய பாடநூல்களில் 11-ம் வகுப்புப் பாடநூல்களும் அடங்கும். இதில் விலங்கியல், தாவரவியல் நூல்கள் அறிவியல் பிரிவின் கீழ்வரும் முதன்மைப் பாடங்களாக உள்ளன.
ஆக்கபூர்வமான அம்சங்கள்
. பாடநூலை எப்படிப் பயன்படுத்துவது என்கிற வழிகாட்டி, குறிப்பிட்ட பாடங்களைப் படித்தால் எதிர்காலத்தில் என்ன வேலைக்குச் செல்லலாம் என்கிற அறிமுகம், கற்றலின் நோக்கத்தைச் சுருக்கமாகக் கூறும் பகுதிகள் பாடநூலின் பயன்பாட்டை மேம்பட்டதாக ஆக்குகின்றன.
. இணையச் செயல்பாடு, க்யு.ஆர். கோட் போன்ற நவீன தகவல்தொடர்புகள் இந்தக் கால மாணவர்களின் அறிவுப்பசிக்குத் தீனி போடும்.
. ஒவ்வொரு பாடத்தையும் விளக்க நிறைய படங்கள், பெட்டிச் செய்திகள், உங்களுக்குத் தெரியுமா பகுதிகள் பாடங்களுக்கு சுவாரசியம் கூட்டுகின்றன.
. நீளமான பாடங்களுக்குப் பதிலாக கருத்து வரைபடம், படவிளக்கம் மூலமே முக்கியப் பகுதிகள் விளக்கப்பட்டுள்ளன.
. இவற்றையெல்லாம்விட, ஒவ்வொரு பாடத்தின் இறுதியில் உள்ள கலைச்சொல் விளக்கங்களும் நூலின் இறுதியில் தரப்பட்டுள்ள ஆங்கிலம் - தமிழ் கலைச்சொல் தொகுப்பும் மிகுந்த பயனுடையவை.
தமிழ் -ஆங்கிலம் என இரண்டு மொழிப் புத்தகங்களிலும் இரண்டு மொழிகளிலும் இந்தப் பட்டியல் இடம்பெற்றுள்ளது சிறப்பு. அதேபோல தாவரங்களின் தமிழ், ஆங்கிலம், அறிவியல் பெயர் தொகுப்பு தரப்பட்டுள்ளதும் முக்கியமானது. தேவையற்ற குழப்பத்தைக் களைவது.
. நீட் போன்ற தேர்வுகளுக்கு உதவும் பாடவாரி கேள்வி-பதில் தொகுப்பும் இடம் பெற்றுள்ளது.
. கூடுதலாகப் படித்து அறிவதற்கு ஆங்கில மூல நூல்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது.
. இந்தியப் பறவையியலின் தந்தை சாலிம் அலி, மூத்த தாவரவியல் அறிஞர் ஈ.கே.ஜானகியம்மாள் போன்றோரைப் பற்றிய குறிப்புகள், இந்திய அறிவியல் சாதனைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
களைய வேண்டியவை:
. ‘உலக சிட்டுக்குருவி நாள்: மார்ச் 20’ என்பது முறைப்படி சர்வதேச அங்கீகாரம் பெறாத நாள். மேலும் சிட்டுக்குருவி அழிவின் விளிம்பில் இல்லை. இதுபோன்ற அறிவியல்பூர்வமற்ற, பொது நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் அறிவியல் புத்தகங்களில் தவிர்க்கப்பட வேண்டும்.
சுவாரசியமாகக் கொடுத்தால் அறிவியல் நிச்சயம் கடினமல்ல என்பதற்கு இந்தப் புத்தகங்கள் சான்றாகத் திகழ்கின்றன.
தமிழில் ஐஏஎஸ் தேர்வெழுத
தரமான புத்தகங்கள்!
ஐஏஎஸ் உள்ளிட்ட அகில இந்தியப் பணிகளுக்கான தேர்வுகளை எழுதும் மாணவர் களுக்குச் சொல்லப்படும் முதல் ஆலோசனை என்சிஇஆர்டி புத்தகங்களை வரி விடாமல் படி என்பதுதான். வரலாறு, புவியியல், இந்திய அரசியலமைப்பு, பொருளாதாரம் குறித்த பாடங்களில் அடிப்படைப் புரிதல்கள் இல்லாமல் இத்தேர்வுகளில் வெற்றி பெற முடியாது. முன்பெல்லாம், என்சிஇஆர்டி புத்தகங்களிலிருந்து நேரடியாகவே கேள்வி கள் கேட்கப்பட்டுவந்தன. தற்போது, தேர்வு முறையும் வினாக்களின் வடிவங்களும் நிறையவே மாறியிருக்கின்றன. எனினும்கூட, மேற்கண்ட பாடங்களில் அடிப்படைப் புரிதல் இல்லாமல் தேர்வுகளை எளிதாக அணுக முடியாது. தமிழிலேயே பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் என்சிஇஆர்டி புத்தகங்களைப் படிக்க கால அவகாசம் போதுமானதாக இருப்பதில்லை.
மேற்கண்ட பாடங்களை ஆங்கிலத்திலேயே படித்துப் புரிந்துகொண்டு முதனிலைத் தேர்வைக் கடந்து முதன்மைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் வேறொரு பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முதன்மைத் தேர்வைத் தமிழில் எழுத விரும்பினால், அதற்கு இதுவரையிலான பள்ளிப் பாடநூல்கள் உதவியாக இருப்பதில்லை. வரலாறு, இந்திய அரசியலமைப்பு ஆகிய பாடங்களுக்காவது சில தனியார் பதிப்பகங்கள் வெளியிடும் மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் கிடைக்கின்றன. புவியியல், பொருளாதாரம் என்று முதன்மைத் தேர்வின் மதிப்பெண் எண்ணிக்கையைத் தீர்மானிக்கிற பாடங் களுக்குத் தமிழில் தரமான புத்தகங்களே இல்லை. தற்போது வெளிவந்துள்ள வரலாறு, புவியியல், பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் பாடநூல்கள் இந்தக் குறையைப் போக்குகின்றன. என்சிஇஆர்டி புத்தகங்களுக்கு இணையான பாடத்திட்ட மாற்றம், அகில இந்தியப் பணிகளுக்கான பாடத்திட்ட மாற்றம் இரண்டையும் கணக்கில்கொண்டு போட்டித் தேர்வு மாணவர்களுக்கு உதவியாக மிகப்பெரும் பணியைச் செய்து முடித்திருக்கிறது தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை!
அடிப்படையான பள்ளிப் பாடநூல்கள் தவிர, போட்டித் தேர்வுகளுக்கான முக்கியமான ஆங்கில நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடவிருப்பதாகவும் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அறிவித்திருந்தது. காலத்தே செய்து முடிக்கப்பட வேண்டிய பணி அது. தாமதம் கூடாது.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago