அற்றைத் திங்கள் - 22: வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்...

By பழ.அதியமான்

காந்தி இறந்த பின் அவரது உடலை ஏன் தைலப் பாடம் செய்ய​வில்லை என்ற சந்தேகம் திடீரென்று எழுந்தது. தைலப் பாடம் என்றால் தெரியுமா என்று ஊடக நண்பர் (40 வயது) ஒருவரிடம் கேட்டேன். “தைலம் என்றால் தைலம்; பாடம் என்றால் பாடம்” என்றார் வடிவேலு பாணியில். தெரிய​வில்லை என்பதை இப்படியும் சொல்லலாம் போலும். இறந்தவரின் உடலை ஒருவகை மருந்தெண்​ணெயில் பதப்​படுத்தி நீண்டகாலம் பாதுகாத்​தலைத் தைலப் பாடம் என்று சொல்வர்.

இன்றைக்கு எவரும் அதைச் செய்வதில்லை; அரசும் அனுமதிக்காது. பழங்காலத்​தில் அரசர்கள் இறந்த பின் அவர்களது உடலைத் தைலப் பாடம் செய்து பாதுகாத்​த​தாகத் தெரிகிறது. நம் நாட்டில் ஒரு பேரரசரைப் போல் மக்கள் செல்வாக்​குடன் வாழ்ந்த காந்தி காலமானபோது, தைலப் பாடம் செய்ய​லாம் என்கிற வேண்டுகோள் எழாமல் போகவில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE