எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் முதல் தொகுப்பு ‘வெயிலோடு போய்’. அந்தத் தொகுப்பில் இருக்கிற மாரியம்மாளும் தங்கராசும் சுப்புராசும் கருப்பசாமியின் அய்யாவும் நான் அதுவரை பார்த்திராத, எழுதியிராத அபூர்வமான மனிதர்களாக இருந்தார்கள் என எழுத்தாளர் வண்ணதாசன் கூறியிருக்கிறார். ‘வெயிலோடு போய்’ சிறுகதை இயக்குநர் சசியின் இயக்கத்தில் ‘பூ’ திரைப்படமாக வெளியாகிப் பெரும் வெற்றிபெற்றது. இதற்காகத் தமிழ்ச்செல்வனுக்குச் சிறந்த திரைக்கதாசிரியர் விருதைத் தமிழ்நாடு அரசின் திரைப்படக் கழகம் வழங்கியது.
இதுவரை தமிழ்ச்செல்வனின் 52 நூல்கள் வெளிவந்துள்ளன. ‘இருட்டு எனக்குப் பிடிக்கும்’ (வாசல் பதிப்பகம்), ‘பேசாத பேச்செல்லாம்’ (உயிர்மை பதிப்பகம்), ‘மிதமான காற்றும் இசைவான கடலலையும்’ (மொத்தக் கதைகளின் தொகுப்பு, தமிழினி பதிப்பகம்), ‘நான் பேச விரும்புகிறேன்’ (வம்சி பதிப்பகம்) ஆகிய நூல்கள் தவிர்த்து, ஏனைய நூல்களை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. ‘நமக்கான குடும்பம்’, ‘அரசியல் எனக்குப் பிடிக்கும்’ போன்ற இவருடைய சில நூல்கள் இதுவரை 27 பதிப்புகள் கண்டுள்ளன. இவ்விரு நூல்களும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. அரசியலைக் கண்டு முகம் சுளித்து, அது ஒரு சாக்கடை என ஒதுங்கும் மக்களுக்கு அரசியல் என்றால் என்ன, அது நம் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்போது, அதை நாம் புறக்கணித்தால் என்ன நடக்கும் என்பதை மிக எளிய மொழியில் விவரித்திருக்கிறார் தமிழ்ச்செல்வன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago