இலவசக் கட்டாயக் கல்வி: இன்றைய முக்கியத் தேவை

By சு.மூர்த்தி

ஆறு முதல் 14 வயதுவரை உள்ள குழந்தைகள் அனைவரும் இலவசக் கட்டாயக் கல்வி பெறுவது அடிப்படை உரிமை என 2009 ஆகஸ்ட் 26இல் மத்திய அரசால் சட்டமாக அறிவிக்கப்பட்டது. அப்போது மாநிலமாக இருந்த ஜம்மு & காஷ்மீர் தவிர்த்து, அனைத்து மாநிலங்களிலும் மத்திய ஆட்சிப் பகுதிகளிலும் 2010 ஏப்ரல் முதல் நாள் இச்சட்டம் நடைமுறைக்கு வருவதை அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்கு உரையாற்றி அறிவித்தார். வேறு சட்டங்களுக்கு இப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. கல்விக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் அது. ஆனால், அதற்கான பலன் நமக்குக் கிடைத்ததா?

கவனிக்க வேண்டிய பிரச்சினைகள்: கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும், ஆறு முதல் 14 வயதுவரை உள்ள குழந்தைகள் அனைவரும் இலவசக் கட்டாயக் கல்வி பெறுவது நிறைவேறாத கனவாகவே உள்ளது. அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகளும் நிர்வாக முறைகளும் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் அளவுக்குப் பெரிதாக மேம்படவில்லை. நாட்டின் மக்கள்தொகையில் சரிபாதிக்கு மேல் உள்ள பாமர ஏழைகளின் பிள்ளைகள் மட்டுமே இலவசக் கல்வியை நம்பியுள்ளனர். அதிகாரமற்றவர்களின் பிள்ளைகள் மட்டுமே படிப்பதால், அரசுப் பள்ளிகளின் குறைகள் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் உள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்