தேசத்தின் சேவைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் வெங்கையா நாயுடு

By செய்திப்பிரிவு

அரசியல் அரங்கில் அவரது ஆரம்ப நாட்கள்முதல் குடியரசுத் துணைத்தலைவராக பதவிவகித்த காலம் வரை, வெங்கையா நாயுடு அவர்களின் வாழ்க்கை, அரசியல் சிக்கல்களைஎளிதாகக் கையாண்டு, பணிவாக வழிநடத்துவதாக அமைந்திருந்தது. இது அவரது தனித்துவமான திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

அவரது வாழ்க்கையில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அது மக்கள் மீதான அன்பு. மாணவர் தலைவராக ஆந்திராவில் அவரது அரசியல் செயல்பாடு தொடங்கியது. அவரது திறமை, பேச்சுத்திறன், பிறரை ஒருங்கிணைத்து வழிநடத்தும் திறன்கள் போன்றவை அபாரமானவை. இந்தத் திறன்களுக்காக அவர் எந்த அரசியல் கட்சியாலும் வரவேற்கப்படுவார்.

ஆனால் அவரோ தேசமே முதன்மையானது என்ற நோக்கத்தைக் கொண்டிருந்ததால் சங் பரிவார அமைப்புகளில் இணைந்து பணியாற்ற விரும்பினார். ஆர்எஸ்எஸ், ஏபிவிபி, ஜனசங்கம், மற்றும் பிஜேபி-யில் இணைந்து அவர் செயல்பட்டார். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில்அவசரநிலை அமல்படுத்தப்பட்டபோது, இளைஞராக இருந்த வெங்கையா நாயுடு அவர்கள், அவசரநிலை எதிர்ப்பு இயக்கத்தில் தன்னை முழுவதுமாக இணைத்துக் கொண்டு தீவிரமாகச் செயல்பட்டார்.

லோக்நாயக் ஜெயப் பிரகாஷ் நாராயணனை ஆந்திராவுக்கு அழைத்ததால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஜனநாயகத்தின் மீதான இந்த அர்ப்பணிப்பை அவரது அரசியல் வாழ்க்கையில் எப்போதுமே காணலாம். 1980-ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில், ஆந்திராவில் என்.டி.ராமாராவின் அரசு, மத்திய காங்கிரஸ் அரசால்முறையற்ற வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டபோது, வெங்கையா நாயுடு ஜனநாயக கொள் கைகளைப் பாதுகாப்பதில் முன்னணியில் இருந்து தீவிரமாகச் செயல்பட்டார்.

வெங்கையா நாயுடு அவர்கள், மிகவும் வலிமை யான அரசியல் அலைகளைக் கூட எளிதாக எதிர் கொண்டு வெற்றி பெற்றுள்ளார். 1978-ம் ஆண்டில், ஆந்திர மாநிலமே காங்கிரஸுக்கு வாக்களித்தது. ஆனால் அந்தச் சூழலிலும்கூட வெங்கையா நாயுடுதாம் போட்டியிட்ட தொகுதியில் காங்கிரஸ் ஆதரவு அலையை முறியடித்து இளம் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து ஆண்டு களுக்குப் பிறகு, என்.டி. ராமாராவ் அலை மாநிலத் தில் எழுந்தபோதும் வெங்கையா நாயுடு பிஜேபி சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். இதன் மூலம் அவர் ஆந்திர மாநிலம் முழுவதும் பிஜேபி-யின் வளர்ச்சிக்கு வழி வகுத்தார்.

வெங்கையா நாயுடு அவர்களின் பேச்சைக் கேட்ட அனைவரும் அவரது பேச்சாற்றலைப் பாராட்டுவார்கள். அவர் நிச்சயமாக வார்த்தை வித்தகர். இளம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த நாட்களில், சட்டமன்ற விவகாரங்களில் அவர் சிறப்பாகச் செயல்பட்டதற்காகவும், தமது தொகுதி மக்களின் நலனில் கவனம் செலுத்தியதற்காகவும் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார்.

என்.டி. ராமாராவ் போன்றவர்கள் அவரது திறமையைக் கவனித்து, அவரை, அவர்களது கட்சியில் இணைத்துக் கொள்ள விரும்பினர், ஆனால் வெங்கையா நாயுடு அவர் கள் அவரது அடிப்படை சித்தாந்தத்தி லிருந்து விலக உறுதியாக மறுத்து விட்டார். ஆந்திராவில் பிஜேபி தலைவராகவும் ஆனார்.

1990-ம் ஆண்டுகளில்தான் பிஜேபி-யின் மத்தியத் தலைமை வெங்கையா நாயுடு அவர்களின் பணிகளைக் கவனித்தது. 1993-ம் ஆண்டில் அவர் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டபோது தேசிய அரசியலில் தமது பணியைத் திறம்படத் தொடங்கினார். இளைஞராக இருந்த போது, அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் மற்றும் அத்வானி அவர்களை பிரமிப்புடன் பார்த்த ஒரு மனிதர் அவர்களுடன் நேரடியாக பணியாற்றுவது உண்மையிலேயே ஒரு மிகச் சிறந்த தருணம்.

பொதுச் செயலாளராக, எங்கள் கட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வருவது மற்றும்தேசத்தின் முதல் பிஜேபி பிரதமரை பொறுப்பேற்க வைப்பது ஆகியவற்றில் அவர் தீவிர கவனம் செலுத்தினார். கட்சியின் தேசியத் தலைவராகவும் அவர் உயர்ந்தார். 2000-வதுஆண்டில், அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள், வெங்கையா நாயுடு அவர்களை அமைச்சராக்க முன்வந்தபோது வெங்கையா நாயுடு அவர்கள் உடனடியாக ஊரக வளர்ச்சி அமைச்சக பொறுப்பை ஏற்க விரும்புவதாகத் தமதுவிருப்பத்தைத் தெரிவித் தார். பிற துறைகளை விடுத்து இந்தத் துறையை அவர் தேர்வு செய்தது, அடல் பிகாரி வாஜ்பாய் உட்பட அனை வரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுக்கு எந்த இலாகா வேண்டும் என்று அவரிடமே கேட்டு அது அவருக்குக் கொடுக்கப்பட்டது. வெங்கையா நாயுடு அவர்களின் முதல் தேர்வு கிராமப்புற வளர்ச்சி என்பதாகவே இருந்தது.

வெங்கையா நாயுடு அவர்கள் மிகத் தெளிவாக இருந்தார். அவர் ஒரு விவசாயி. அவர் தமது ஆரம்ப நாட்களை கிராமங்களில் கழித்தார். எனவே, அவர் கிராமப்புற வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்துப் பணியாற்ற விரும்பினார். அவர் அந்தத் துறையின் அமைச்சராக இருந்தபோது, பிரதமரின் கிராமச்சாலைகள் திட்டத்தை உருவாக்குவதிலும், செயல்படுத்துவதி லும் முக்கியப் பங்கு வகித்தார்.சில ஆண்டுகளுக்குப் பிறகு, 2014-ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றபோது, நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு ஆகிய முக்கிய இலாகாக்களுக்கு அவர் பொறுப்பு வகித்தார். அவர் அந்தப் பதவியில் இருந்த காலத்தில்தான் தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி தொடர்பான முக்கியமான திட்டங்களை நாங்கள் தொடங்கினோம்.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்காக நீண்ட காலமாக மிகச் சிறப்பாகப் பணியாற்றிய தலைவர் களில் வெங்கையா நாயுடு மிக முக்கிய மானவர் ஆவார். தில்லிக்கு வருவதற்கு முன்பு நான் குஜராத்தில் பணியாற்றினேன். 2014-ம் ஆண்டில் நான் தில்லிக்கு வந்தபோது நான் ஒரு வெளியூர் நபராக உணர்ந்தேன். அதுபோன்ற காலங்களில், வெங்கையா நாயுடு அவர்களின் நுண்ணறிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

குடியரசுத் துணைத்தலைவரான பிறகு, அவர் அந்தப் பொறுப்பிலும் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அது அந்த அலுவலகத்தின் கண்ணியத்தை மேலும் உயர்த்தியது. இளம் நாடாளுமன்ற உறுப்பினர் கள், பெண் உறுப்பினர்கள் மற்றும் முதல் முறை உறுப்பினர்கள் பேசுவதற்கான வாய்ப்பைப் பெறுவதை உறுதி செய்யும் வகையில், மாநிலங் களவையின் சிறந்த தலைவராகவும் அவர் செயல்பட்டார். அவைக்கு வருவதற்கு அவர் அதிக முக்கியத்துவம் அளித்தார். நாடாளுமன்றக் குழுக்களை மிகவும் திறன்மிக்கவையாக மாற்றினார், அவையில் விவாதங்களையும் அவர் அதிகரித்தார்.

370 மற்றும் 35 (ஏ) பிரிவுகளை நீக்குவதற்கான முடிவு மாநிலங்களவையில் வைக்கப்பட்டபோது, வெங்கையா நாயுடு அவர்கள்தான் அவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்திருந்தார். டாக்டர் ஷியாமாபிரசாத் முகர்ஜியின் ஒன்றுபட்ட இந்தியா என்ற கனவால் ஈர்க்கப்பட்ட இளைஞரான வெங்கையா நாயுடு, அந்தக் கனவு இறுதியாக நிறைவேறியபோதும் அவைத் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்தார். வெங்கையா நாயுடு அவர்கள் தமது பொறுப்புகள் மற்றும் அரசியல் தவிர, ஒரு ஆர்வமுள்ள வாசகர் மற்றும் எழுத்தாளரும் ஆவார்.

வாழ்வில் மைல்கல் சாதனையை எட்டியுள்ள வெங்கையா நாயுடு அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள் கிறேன். இளம் தொண்டர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் சேவை செய்ய ஆர்வமுள்ள அனைவரும் வெங்கையா நாயுடு அவர்களின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்டு அதைப் பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன். இவரைப் போன்றவர்கள்தான் நமது நாட்டை சிறந்த நாடாகவும், துடிப்பானதாகவும் உருவாக்குகிறார்கள்.

- பிரதமர் நரேந்திர மோடி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்