தொன்மம் தொட்ட கதைகள் - 10: உடலைத் துறந்த அம்மை

By சுப்பிரமணி இரமேஷ்

காரைக்காலம்மையார் என்ற தொன்ம மதிப்புடைய பெண்ணைப் பற்றிய ‘என்புதோல் உயிர்’ என்கிற எழுத்தாளர் அ.வெண்ணிலாவின் சிறுகதை, அம்மையாரின் வாழ்க்கை குறித்த கதையாடலில் மீள் வாசிப்பைக் கோருகிறது. கணவனுக்காகத் தன் அழகைக் காத்துவந்த புனிதவதி, திடீரென இறைவனிடம் பேய் உருவம் கேட்டதற்குக் கணவனின் இரண்டாவது திருமணம் மட்டும்தான் காரணமா? என்ற கேள்வியை முன்வைத்து இப்புனைவு உரையாடலை நிகழ்த்துகிறது.

பரமதத்தன் புனிதவதியாரைப் பிரிந்து சென்றபிறகு புனிதவதி இந்த உலகத்தை எப்படி எதிர்கொண்டிருப்பார் என்ற கேள்வி முக்கியமானது. வணிகம் செய்வதற்காகச் சென்றவன் ஏழு வருடங்களாகத் திரும்பவில்லை. புனிதவதியின் மனம் எத்தகைய துயரத்தில் ஆழ்ந்திருக்கும்? சில நாள்கள் மட்டுமே கணவனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தவர்; வனப்பில் கொஞ்சமும் குறைந்தவரில்லை. பரமதத்தனின் பிரிவுக்குப் பிறகு அவரது அழகே அவருக்குப் பெரும் துயரத்தை உருவாக்குகிறது. அதனால்தான் இந்த உடலை இழக்கத் துணிகிறார். அழகு பெருகிய உடலை அனைவரும் வெறுக்கும் உடலாக மாற்றிக்கொள்கிறார். ‘காரைக்கால் பேய்’ என்று தன்னை அழைத்துக் கொள்கிறார். திருத்தொண்டர் புராணம் ஒரு பக்திப் பனுவல். அதனால் புனிதவதியாரின் சிவபக்திக்கு மட்டுமே சேக்கிழார் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். நவீன இலக்கியங்கள் மட்டுமே மறைக்கப்பட்ட பக்கங்கள்மீது ஒளிபாய்ச்சி வருகின்றன. அ.வெண்ணிலா அதனைத்தான் இக்கதையில் செய்திருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்