க
ன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கெனவே கீழே இருக்கிறது அதிமுக. போதாக்குறைக்கு கோஷ்டிப் பூசல்கள் வேறு கட்சியைப் பதம் பார்க்கின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அண்மையில் நடந்த உண்ணாவிரதத்தில் இந்தப் பூசல் வெளிப்படையாகத் தெரிந்தது. பழனிசாமி – பன்னீர்செல்வம் அணிகள் இணைந்த பின்பும், குமரி அதிமுகவில் இணக்கம் ஏற்படவில்லை. மாவட்டச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான விஜயகுமார் தங்களை மதிக்கவில்லை என்பது கட்சியில் ஒரு பகுதியினரின் குற்றச்சாட்டு. தினகரன் அணியில் அதிமுக நிர்வாகிகள் சிலர் இருக்க இதுதான் காரணம் என்றும் பேசப்படுகிறது.
குமரி மாவட்ட அதிமுகவின் முதல் மாவட்டச் செயலாளரும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளருமான தமிழ்மகன் உசேன் தலைமையில் உண்ணாவிரதம்; அமைச்சர் பாண்டியராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்வார் என்றுதான் முதலில் அறிவித்திருந்தது தலைமை. ஆனால், மாவட்ட அதிமுக சார்பில் உண்ணாவிரதம் தொடர்பாக அச்சடிப்பட்ட நோட்டீஸ், விளம்பரங்கள் எதிலும் தமிழ்மகன் உசேன் பெயர் இல்லை. “அதிமுகவின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர், 14 ஆண்டுகள் மாவட்டச் செயலாளராக இருந்தவர், அவருக்கே இந்த நிலையா?” என உண்ணாவிரதப் பந்தலிலேயே தொண்டர்கள் மத்தியில் பேச்சு அடிபட்டது. ஆனாலும், அதையெல்லாம் பார்க்காமல் உண்ணாவிரதத்தில் பங்கேற்றார் உசேன். அதேசமயம், விஜயகுமார் மீது அதிருப்தியில் இருக்கும் மாவட்ட நிர்வாகிகள் பலரும் புறக்கணித்தனர்.
நிலைமையைப் புரிந்துகொண்ட பாண்டியராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜனிடம் போனை வாங்கி, நிர்வாகிகளை அழைத்துப் பேசினார். இதையடுத்து சிலர் உண்ணாவிரதத்துக்கு வந்து கலந்துகொண்டனர். ஆனால், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் சொந்த ஊரான குமரிக்கு வரவேயில்லை. குமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு அதிமுகவில் பொறுப்பாளார்களாக நியமிக்கப்பட்டவர்களில் தளவாய் சுந்தரமும் ஒருவர். தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியும்கூட. “மேடைக்கு மேடை, ‘தலைமைக் கழகத்தில் இருந்து யாரும் தேவையில்லை. நாம் அனைத்திலும் ஜெயிப்போம்’ என்று பேசுகிறார் மாவட்டச் செயலாளர். மூத்த தலைவர்களுக்கு மதிப்பு இல்லை” என பொறுமுகின்றனர் தளவாய் சுந்தரத்தின் ஆதரவாளர்கள்.
தன் மீதான புகார்களை மறுக்கும் விஜயகுமார், “அம்மாவை வைத்துத்தான் கட்சி. தனி நபர்களை முன்னிறுத்தியல்ல. இயக்கத்தை எழுச்சிப் பாதையில் கொண்டுசெல்கிறேன். இது தலைமைக்கும் தெரியும்” என்கிறார். ஆனால், ஏராளமான புகார்கள் அவர் மீது தலைமைக் கழகத்துக்குச் சென்றிருக்கின்றன. பூசல் பூகம்பமாக வெடிக்கும் நாள் தொலைவில் இல்லை என்று தெரிகிறது.
- என்.சுவாமிநாதன்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago