திருப்பூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024

By செய்திப்பிரிவு

சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வாழும் மாவட்டம் இது. மேற்கு தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மிக்க மாவட்டங்களில் முக்கிய நகரம் திருப்பூர். நாட்டின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் இந்நகருக்கு முக்கியப் பங்கு உண்டு. கோவை மாவட்டத்துடன் இணைந்திருந்த திருப்பூர் 2008-ல் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மூன்றே மாதங்களில் திருப்பூர் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பெருந்துறை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதில் அடங்கியுள்ளன.

பின்னலாடை உற்பத்தி மற்றும் அதைச் சார்ந்த தொழில் நிறுவனங்கள், சிறு குறு நிறுவனங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டும். ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி அளவுக்கு வெளிநாட்டு ஏற்றுமதி மற்றும் உள்நாட்டுப் பின்னலாடை வர்த்தகத்தைக் கொண்ட பகுதி திருப்பூர்.மேலும், திருப்பூர் நகரத்தைத் தவிர தொகுதிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளும் விவசாயம் சார்ந்தவை. அரிசி, கரும்பு, வாழை, தென்னை, பருத்தி, சோளம், தக்காளி உள்ளிட்டவை பிரதான பயிர்களாக உள்ளன. பாரம்பரிய பாத்திர உற்பத்தி, வெண்ணெய், தயிர் உற்பத்தி, சிற்பத் தொழில். விசைத்தறித் தொழில் ஆகியவையும் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்துக்கான அம்சங்களாக உள்ளன.

ஒரு சுவாரஸ்யம்: வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக இருந்தவர் ராமகிருஷ்ண ஹெக்டே. 1999-ல் திருப்பூரில் நடைபெற்ற ஏற்றுமதியாளர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் அமைச்சராகப் பங்கேற்க வந்தவர், அதே நாளில் மத்தியில் ஆட்சி கவிழ்ந்த காரணத்தால் பதவி இழக்க நேரிட்டது. திருப்பூர் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டு 2009 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இரு தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது. இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:

⦁ திருப்பூர் வடக்கு
⦁ திருப்பூர் தெற்கு
⦁ பவானி
⦁ அந்தியூர்
⦁ கோபிசெட்டிப்பாளையம்
⦁ பெருந்துறை

திருப்பூர் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,98,443

முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்


ஆண்டு
வெற்றி பெற்றவர் 2-ம் இடம் பிடித்தவர்

2009

C. சிவசாமி, அதிமுக
S. K. கார்வேந்தன், காங்கிரஸ்

2014
V. சத்தியபாமா, அதிமுக N. தினேஷ்குமார், தேமுதிக

2019
K. சுப்பராயன்,சிபிஐ எம்.எஸ்.எம்.ஆனந்தன், அதிமுக


2019-ம் ஆண்டு திருப்பூர் மக்களவைத் தேர்தலின் நிலவரம்:

2024-ம் ஆண்டு திருப்பூர் மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE