பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சியின் மத்தியில் அமைந்துள்ள சுப்பிரமணியர் கோயில் கல்வெட்டின் கூற்றுப்படி 1,000 ஆண்டுகள் தொன்மையானது பொள்ளாச்சி. நகரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகள் பல ஜமீன்களின் ஆளுமையின் கீழ் இருந்தன. பின்னர் ஆங்கிலேயர்கள் ஆட்சியின்கீழ் வந்தன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக விளங்கியது பொள்ளாச்சி.1977-ம் ஆண்டு முதல் தனித் தொகுதியாக இருந்த பொள்ளாச்சி தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு 2009-ம் ஆண்டு பொதுத் தொகுதியாக மாறியது.

தமிழகத்தில் அதிக அணைகளைக் கொண்ட மக்களவைத் தொகுதி என்பதால், தென்னை, திராட்சை, நிலக்கடலை, மக்காசோளம், காய்கறிகள், தேயிலை உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. தமிழகத்தில் அதிகம் தேங்காய் விளையும் பகுதி இது. குறிப்பாக தென்னை விவசாயம், அது சார்ந்த தேங்காய், தேங்காய் நார் தொழில் அதிகமாக நடக்கிறது. கேரள மாநில எல்லையொட்டிய தொகுதி என்பதால் அதன் தாக்கம் உண்டு.

தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு பொள்ளாச்சி தொகுதி சற்று மாறுதல் அடைந்துள்ளது. கோவையின் தொண்டாமுத்தூர் பகுதியும் இணைந்துள்ளதால், கோவை பகுதியின் அரசியல், சமூக சூழல் தாக்கம் கொண்ட தொகுதியாக உள்ளது. திராவிட கட்சிகளே தொடர்ந்து போட்டியிட்டு வந்துள்ள தொகுதி இது. மதிமுகவுக்கும் ஒட்டு வங்கி இருந்ததால் இரண்டுமுறை அக்கட்சியின் சார்பில் கிருஷ்ணன் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.1951, 1957, 1962 ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக ஏழு முறை வென்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:

• பொள்ளாச்சி
• கிணத்துக்கடவு
• மடத்துக்குளம்
• உடுமைலப்பேட்டை
• தொண்டாமுத்தூர்
• வால்பாறை (தனி)

பொள்ளாச்சி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,81,795
• ஆண் வாக்காளர்கள்: 7,66,077
• பெண் வாக்காளர்கள்: 8,15,428
• மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 290

முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்:


ஆண்டு
வெற்றி பெற்றவர்
2-ம் இடம் பிடித்தவர்
1971
நாராயணன், திமுக நல்லசிவம், ஸ்தாபன காங்
1971
இடைத்தேர்தல்
கலிங்கராயர், திமுக
ஆர்.கே.கவுண்டர், சுயேச்சை
1977 ராஜூ, அதிமுக தண்டபாணி, திமுக 1980
தண்டபாணி, திமுக
நடராஜன், அதிமுக 1984 அண்ணாநம்பி, அதிமுக கிருஷ்ணசாமி, திமுக 1989
ராஜா ரவி வர்மா, அதிமுக ஆறுமுகம், சிபிஐ
1991
ராஜா ரவி வர்மா, அதிமுக
தண்டபாணி, திமுக
1996
கந்தசாமி, தமாகா அண்ணா நம்பி, அதிமுக 1998
தியாகராஜன், அதிமுக
கோவை தங்கம், தமாகா 1999 கிருஷ்ணன், மதிமுக தியாகராஜன், அதிமுக 2004 கிருஷ்ணன், மதிமுக முருகன், அதிமுக
2009 சுகுமார், அதிமுக சண்முகசுந்தரம், திமுக 2014 மகேந்திரன், அதிமுக
ஈஸ்வரன், பாஜக
2019
சண்முகசுந்தரம் K, தி.மு.க C மகேந்திரன், அதிமுக


2019-ம் ஆண்டு பொள்ளாச்சி மக்களவைத் தேர்தலின் நிலவரம்:


2024-ம் ஆண்டு பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்