கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024

By செய்திப்பிரிவு

கொங்கு மண்டலத்தின் மையப் பகுதியான கோயம்புத்தூர், தமிழகத்தின் இரண்டாவது பெரிய தொழில் நகரம். நூற்பாலைகளில் தொடங்கிய தொழில் வளர்ச்சி, குண்டூசி முதல் ராணுவ தளவாடங்கள் வரை உற்பத்தி செய்யும் தொழில் மையமாக உள்ளது. 1952-ல் கோவை மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.

பொறியியல், வேளாண் கருவிகள், நூற்பாலைகள், ஜவுளித் தொழிலுக்கான உபகரணங்கள், மோட்டார் பம்புகள், வாகன உதிரிப் பாகங்கள், காற்றாலைக்கான பாகங்கள், தங்க, வைர நகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சென்னைக்கு அடுத்தபடியாக மென்பொருள் துறை, கல்வி, மருத்துவத் துறையிலும் கோவை கொடிகட்டிப் பறக்கிறது. அதேசமயம், ஊரகப் பகுதிகளில் விவசாயமும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஒரு சுவாரஸ்யம்: 1951-ம் ஆண்டு கோவை முதல் மக்களவைத் தேர்தலைச் சந்தித்தது. அப்போது காங்கிரஸ் சார்பாக ராமலிங்க செட்டியார் களம் கண்டார். ஆனால், அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. எனவே, தமிழக வரலாற்றில் போட்டியின்றி எம்பியான முதல் வேட்பாளர் என்னும் பெயரைப் பெற்றார்.

திமுகவின் கோட்டை என்று ’கொங்கு பகுதி’ அறியப்படுகிறது. எனினும், அதிமுகவுக்கு இத்தொகுதியில் குறிப்பிடத்தகுந்த அளவில் வாக்கு வங்கி இருந்தாலும், அதிமுக ஒருமுறை மட்டுமே வென்றுள்ளது. பெரும்பாலும், திராவிட கட்சிகள் இந்தத் தொகுதியை இடதுசாரிக் கட்சிகள், காங்கிரஸ், பாஜகவுக்கு ஒதுக்குவதே வழக்கம். இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:

கோயம்புத்தூர் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 20,83,034

ஆண் வாக்காளர்கள்: 10,30,063
பெண் வாக்காளர்கள்:10,52,602
மூன்றாம் பாலின வாக்காளர்கள்:369

முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்


ஆண்டு
வெற்றி பெற்றவர்
2-ம் இடம் பிடித்தவர்

1971
K. பாலதண்டாயுதம், சிபிஐ ராமசாமி, இந்திய தேசிய காங்கிரஸ்

1977
பார்வதி கிருஷ்ணன், சிபிஐ லட்சுமணன் S.V., காங்கிரஸ்
1980 ராம் மோகன் (எ) இரா மோகன் R, திமுக
பார்வதி கிருஷ்ணன், சிபிஐ

1984
சி. கே. குப்புசுவாமி, காங்கிரஸ் உமாநாத். R, சிபிஎம்
1989 சி. கே. குப்புசுவாமி, காங்கிரஸ் உமாநாத். R, சிபிஎம்

1991

சி. கே. குப்புசுவாமி, காங்கிரஸ்
K. ரமணி, சிபிஎம்

1996
M. இராமநாதன், திமுக சி. கே. குப்புசுவாமி, காங்கிரஸ்

1998
சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக கே.ஆர். சுப்பையன், திமுக

1999
சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக நல்லகண்ணு. R, சிபிஐ

2004
கே. சுப்பராயன், சிபிஐ சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக
2009
நடராஜன் P R, சிபிஎம்
பிரபு. R, காங்கிரஸ்

2014
P. நாகராஜன், அதிமுக சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக

2019
நடராஜன் P R, சிபிஎம் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக

கோவை தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி 7 முறையும், காங்கிரஸ் கட்சி 5 முறையும், திமுக, பாஜக கட்சிகள் தலா இரு முறையும், அதிமுக ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.

2019-ம் ஆண்டு கோயம்புத்தூர் மக்களவைத் தேர்தலின் நிலவரம்:

2024-ம் ஆண்டு கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE