பெரம்பலூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மக்களவைத் தொகுதி நீண்டகாலமாக தனித் தொகுதியாக இருந்தது. இந்த நிலையில், 2009-ம் ஆண்டு மறுசீரமைப்புக்குப் பிறகு பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது. கி.பி 10-ம் நூற்றாண்டில் பராந்தகச் சோழன் காலத்தில் கட்டப்பட்ட வாலீஸ்வரர் கோயில், ஆங்கிலேயர் படைக்கும் பிரெஞ்சு படைக்கும் இடையே வாலிகண்டா போர் நடைபெற்ற ரஞ்சன்குடிகோட்டை ஆகிய வரலாற்றுச் சின்னங்கள் இத்தொகுதிக்குள் அமைந்துள்ளன.

பெருமளவு கிராமப்புறங்களைக் கொண்ட இந்தத் தொகுதியில் விவசாயம் மட்டுமே பிராதனமான தொழிலாக உள்ளது. சின்ன வெங்காயம், மக்காச்சோளம் உற்பத்தியில் மாநிலத்திலேயே முதலிடத்தில் உள்ளது இந்தத் தொகுதி. வாழை, கரும்பு, பருத்தி, நெல் ஆகிய பயிர்களும் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. விவசாயப் பொருட்களின் விலை நிரந்தரமானதாக இல்லை என்பதால் கடுமையான பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. இதனால், விவசாயத் தொழிலை விட்டு வேலை தேடி பெரு நகரங்களுக்கும், அயல்நாடுகளுக்கும் இடம்பெயர்வதும் இத்தொகுதியில் அதிகம்.

தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டவுடன், அதில் இடம் பெற்றிருந்த சட்டப்பேரவைத் தொகுதிகள் பலவும் வேறு தொகுதிகளுக்கு மாற்றப்பட்டன. பெரம்பலூரைத் தவிர திருச்சி மாவட்டத்தின் லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் தொகுதிகளும், கரூர் மாவட்டத்தின் குளித்தலை சட்டப்பேரவை தொகுதியும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் இணைக்கப்பட்டு புதிய தொகுதியாக உருவாக்கப்பட்டது. இது தனித் தொகுதியாக இருந்தபோது, திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி தொகுதி எம்பியுமான ஆ.ராசா இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:

பெரம்பலூர் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 14,39,315

• ஆண் வாக்காளர்கள்: 6,97,984
• பெண் வாக்காளர்கள்: 7,41,200
• மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 131

முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்:


ஆண்டு

வெற்றி பெற்றவர்
2-ம் இடம் பிடித்தவர்

1967

துரையரசு, திமுக

ராமசாமி, காங்கிரஸ்

1971

துரையரசு, திமுக

அய்யாகண்ணு, ஸ்தாபன காங்கிரஸ்
1977
அசோக்ராஜ், அதிமுக

ராஜூ, திமுக
1980 மணி, காங்கிரஸ்
தங்கராஜூ, அதிமுக
1984
தங்கராஜூ அதிமுக

தியாகராஜன், திமுக

1989

அசோக்ராஜ், அதிமுக

பனவைகருந்தழன், திமுக
1991 அசோக்ராஜ், அதிமுக
ராமசாமி, திமுக

1996

ஆ.ராசா, திமுக

சுப்பிரமணியன், காங்கிரஸ்

1998
ராஜரத்தினம், அதிமுக
ஆ.ராசா, திமுக
1999 ஆ.ராசா, திமுக ராஜரத்தினம், அதிமுக

2004

ஆ.ராசா, திமுக
சுந்தரம், அதிமுக
2009 நெப்போலியன், திமுக பாலசுப்பிரமணியன், அதிமுக
2014 மருதராஜா, அதிமுக சீமனூர் பிரபு, திமுக
2019 DR. பாரிவேந்தர் T.R., திமுக சிவபதி N R, அதிமுக


பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் திமுக 7 முறையும், அதிமுக 6 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி வாகை சூடியுள்ளது.
2019-ம் ஆண்டு பெரம்பலூர் மக்களவைத் தேர்தலின் நிலவரம்:

2024-ம் ஆண்டு பெரம்பலூர் மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE