கடவுளர், புராணக் கதாபாத்திரங்கள், வரலாற்றுக்கு முற்பட்ட இடங்கள், நிகழ்வுகள் ஆகியனவும் தொன்ம மதிப்புடையவை. அப்படியொரு நிலத்தைத்தான் புதுமைப்பித்தன் ‘கபாடபுரம்’ என்ற சிறுகதையாக எழுதியுள்ளார். புதுமைப்பித்தன் தொன்மத்தைப் புனைவாக்குவதில் தேர்ந்தவர். ‘ஆற்றங்கரைப் பிள்ளையார்’ என்ற அவரது முதல் சிறுகதையே ‘பிள்ளையார்’ என்ற தொன்மத்தைக் குறியீடாக்கி எழுதப்பட்டதுதான்.
‘புதிய நந்தன்’, ‘புதிய கந்த புராணம்’, ‘அன்று இரவு’, ‘அகலிகை’, ‘சாபவிமோசனம்’, ‘வேதாளம் சொன்ன கதை’ போன்ற பல கதைகளில் புதுமைப்பித்தன் தொன்மத்தை நவீன வாசிப்புக்கு உட்படுத்தி எழுதியிருக்கிறார். கபாடபுரம் தொன்ம மதிப்புடைய நிலம். சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், ராமாயணம், இறையனார் களவியலுரை ஆகிய ஆக்கங்களில் கபாடபுரம் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ‘வடிவேல் எறிந்த வான்பகை பொறாது/பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்/குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள’ (காடுகாண் காதை) என்ற சிலப்பதிகாரத்தின் மூன்று அடிகளைத்தான் புதுமைப்பித்தன் ‘கபாடபுரம்’ புனைவாக விரித்து எழுதியுள்ளார். இந்தக் கபாடபுரத்தில்தான் இரண்டாம் தமிழ்ச் சங்கம் செயல்பட்டிருக்கிறது. பாண்டியர்களின் ஆளுகைக்கு உட்பட்ட இந்த நிலம் கடல் சீற்றத்தால் அழிந்துபோனது. இந்த நிலப்பரப்பின் வழியாகத்தான் பஃறுளியாறும் குமரியாறும் ஓடின.இந்த நிலத்தை நிர்மாணித்தவன் வேலெறிந்த பாண்டியன்.இந்தத் தகவல்கள் தாம் புதுமைப்பித்தன் இந்தப் புனைவுக்காக எடுத்துக்கொண்ட கச்சாப் பொருள்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago