விழுப்புரம் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024

By செய்திப்பிரிவு

விழுப்புரம் தொகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்தத் தொகுதியில் நெல், கரும்பு சாகுபடி அதிகம் நடைபெறும். தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் தான் இந்தப் பகுதி அமைந்துள்ளது. இதனால், கரும்பு அதிகமான அளவில் விளைவிக்கப்படுகிறது. எனவே, கரும்பு ஆலைகளும் இந்தப் பகுதியில் அதிகம் உள்ளன. இந்தத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராமசாமி படையாச்சி நீண்டகாலம் எம்.பி.யாக இருந்திருக்கிறார். சமீபகாலமாக, இந்தத் தொகுதியில் திமுக, அதிமுக நேரடியாகக் களம் கண்டு வருகின்றது.

மதிமுக மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய செஞ்சி ராமச்சந்திரன் இரண்டு முறை எம்.பி.யாக இருந்த தொகுதி இது. பாமகவும் இந்தத் தொகுதியில் வென்றுள்ளது. தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு 2009-ம் ஆண்டு முதல் விழுப்புரம் தனித் தொகுதியாக மாற்றப்பட்டது. இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:

விழுப்புரம்
வானூர் (தனி)
திண்டிவனம் (தனி)
திருக்கோயிலூர்
உளுந்தூர்பேட்டை
விக்கரவாண்டி

விழுப்புரம் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 14,94,259

ஆண் வாக்காளர்கள்: 7,40,412
பெண் வாக்காளர்கள்: 7,53,638
மூன்றாம் பாலின வாக்காளர்கள்:209

முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்:

திண்டிவனம் தொகுதி:

ஆண்டு
வெற்றி பெற்றவர்

1971

லட்சுமி நாராயணன், காங்

1977
லட்சுமி நாராயணன், காங்

1980
ராமசாமி படையாச்சி, காங்
1984
ராமசாமி படையாச்சி, காங்

1989
எஸ்.எஸ். ராமதாஸ், காங்

1991
வாழப்பாடி ராமமூர்த்தி, காங்
1996
ஜி.வெங்கட்ராமன், திமுக

1998

செஞ்சி ராமசந்திரன், மதிமுக

1999
செஞ்சி ராமசந்திரன், மதிமுக
2004 தன்ராஜ், பாமக


விழுப்புரம் (தனித்தொகுதி)


ஆண்டு

வெற்றி பெற்றவர்

2009
முருகேசன் ஆனந்தன், அதிமுக

2014
ராஜேந்திரன், அதிமுக

2019
ரவிக்குமார் D, திமுக


விழுப்புரம் தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்ட பின்னர், அதிமுக 2 முறையும், திமுக ஒரு முறையும் வென்றுள்ளது.

2019-ம் ஆண்டு விழுப்புரம் மக்களவைத் தேர்தலின் நிலவரம்:

2024-ம் ஆண்டு விழுப்புரம் மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE