கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024

By செய்திப்பிரிவு

தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் உருவான புதிய தொகுதி கள்ளக்குறிச்சி. கள்ளக்குறிச்சி வேகமாக வளர்ந்து வரும் பகுதி என்பதால் கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாகவே தமிழக அரசு அறிவித்துள்ளது. மற்ற பல தொகுதிகளைப் போல இந்தப் தொகுதி பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. மாறாக, புதிய தொகுதியாகவே உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் 1970-களில் இரண்டு முறை கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியாக இருந்துள்ளது.

இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:

ரிஷிவந்தியம்
சங்கராபுரம்
ஆத்தூர் (தனி)
கெங்கவல்லி (தனி)
கள்ளக்குறிச்சி (தனி)
ஏற்காடு (தனி)

கள்ளக்குறிச்சி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,58,749

ஆண் வாக்காளர்கள்: 7,68,729
பெண் வாக்காளர்கள்: 7,89,794
மூன்றாம் பாலின வாக்காளர்கள்:226

முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்:

ஆண்டு
வெற்றி பெற்றவர்
2-ம் இடம் பிடித்தவர்

1967

தேவகன், திமுக
பார்த்தசாரதி, காங்


1971

தேவகன், திமுக
வீராசாமி, ஸ்தாபன காங்
2009 ஆதிசங்கர், திமுக
தன்ராஜ், பாமக
2014
காமராஜ், அதிமுக

மணிமாறன், திமுக
2019 கௌதம் சிகாமணி, திமுக
எல்.கே.சுதீஷ், தேமுதிக

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் திமுக 4 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

2019-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மக்களவைத் தேர்தலின் நிலவரம்:

2024-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE