தமிழகத்தில் கடந்த காலங்களில் காங்கிரஸ் வலிமையாக இருந்த தொகுதிகளில் கிருஷ்ணகிரியும் ஒன்று. கர்நாடக, ஆந்திர எல்லையொட்டிய தொகுதி என்பதால், தமிழ் மொழி பேசும் மக்கள் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களும் கணிசமாக வசிக்கின்றனர். ஆகவே, தேர்தலில் இவர்களின் முடிவும் எதிரொலிக்கும். இதனால், அரசியல் கட்சிகள் அதற்கு ஏற்ற வகையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வது வழக்கம். மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி பல முறை போட்டியிட்டு வென்ற தொகுதி இது. இதனால் காங்கிரஸுக்கு செல்வாக்கு உள்ள தொகுதியாக கிருஷ்ணகிரி உள்ளது.
கிருஷ்ணிகிரி, ஒசூர் தொகுதிகளில் அதிகமான தொழிற்சாலைகள் இருப்பதால் தொழிலாளர்களும் கணிசமாக வசிக்கின்றனர். இதுமட்டுமின்றி காய்கறிகள், பூக்கள் என தோட்டப்பயிர்கள் அதிக அளவில் பயிர் செய்யப்படும் பகுதியாகவும் கிருஷ்ணகிரி தொகுதி விளங்கி வருகிறது. ரோஜா பூக்கள் இங்கிருந்து அதிகஅளவில் ஏற்றுமதி ஆகிறது. பெங்களூருக்கு மிக அருகில் இருப்பதால் ஐடி உள்ளிட்ட நிறுவனங்களும் ஒசூரை மையப்படுத்தி தற்போது தளிர்த்து வருகின்றன.
பலமுறை காங்கிரஸ் வென்ற இந்தத் தொகுதியில் சமீபகாலமாக திமுகவும், அதிமுகவும் பலம் காட்டி வருகின்றன. எனினும், கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:
⦁ கிருஷ்ணகிரி
⦁ ஒசூர்
⦁ பர்கூர்
⦁ தளி
⦁ ஊத்தங்கரை (தனி)
⦁ வேப்பனஹள்ளி
கிருஷ்ணகிரி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 16,09,913
ஆண் வாக்காளர்கள்: 8,07,389
பெண் வாக்காளர்கள்: 8,02,219
மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 305
முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்:
2019-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தலின் நிலவரம்:
2024-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago