தருமபுரி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024

By செய்திப்பிரிவு

கிராமப்புறங்கள் அதிக அளவு கொண்ட தருமபுரி தொகுதி தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி குன்றிய பகுதிகளில் ஒன்றாக உள்ளது. தமிழகத்தில் தேர்தலில் சாதி அதிகம் ஆதிக்கம் செலுத்தும் தொகுதியாகத்தான் தருமபுரி இருந்து வருகிறது.தொழிற்சாலைகள் இல்லாத நிலையில் விவசாயம் மட்டுமே ஒரே தொழிலாக இருந்து வருகிறது. பிழைப்புக்காக வேறு மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலமான கர்நாடகாவுக்கும் கூலித்தொழிலாளர்களாக செல்ல வேண்டிய நிலையிலேயே இந்தப் பகுதி மக்கள் உள்ளனர். 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வென்ற இரண்டு தொகுதிகளில் தருமபுரியும் ஒன்று. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டு அதிமுகவை வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாமகவுக்கு வலிமையான வாக்கு வங்கி உள்ள தொகுதி. கூட்டணி பலத்தைத் தாண்டி தனிப்பட்ட முறையில் பாமக செல்வாக்குடன் இருப்பதால் வெற்றி அல்லது இரண்டாவது இடத்தைத் தொடர்ந்து கைப்பற்றி வந்துள்ளது. 1989-ம் ஆண்டு தேர்தல் முதலே பாமக இங்கு தனது வாக்கு வங்கியை நிரூபித்து வருகிறது. பாமக சார்பில் பாரிமோகன், பு.த.இளங்கோவன், செந்தில் என பலர் இங்கு எம்.பி.யாக இருந்துள்ளனர். மறைந்த தமிழக காங்கிரஸ் தலைவர் வாழப்படி ராமமூர்த்தியும் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வாகியுள்ளார். இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:

⦁ தருமபுரி
⦁ பென்னாகரம்
⦁ மேட்டூர்
⦁ பாப்பிரெட்டிபட்டி
⦁ பாலக்கோடு
⦁ அரூர் (தனி)

தருமபுரி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,12,732
ஆண் வாக்காளர்கள்: 7,64,878
பெண் வாக்காளர்கள்: 7,47,678
மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 176

முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்:

ஆண்டு வெற்றி பெற்றவர்
2ம் இடம் பெற்றவர் 1977 வாழப்பாடி ராமமூர்த்தி, காங்கிரஸ் பொன்னுசாமி, ஸ்தாபன காங் 1980 அர்ஜூனன், திமுக பூவராகவன், ஜனதா 1984
தம்பிதுரை, அதிமுக பார்வதி கிருஷ்ணன், சிபிஐ
1989
எம்.ஜி.சேகர், அதிமுக பு.த.இளங்கோவன், பாமக 1991 தங்கபாலு, காங்
பு.த.இளங்கோவன், பாமக 1996 தீர்த்தராமன், தமாகா சுப்பிரமணியம், காங் 1998
பாரிமோகன், பாமக தீர்த்தராமன், தமாகா 1999 பு.த.இளங்கோவன், பாமக கே.பி.முனுசாமி, அதிமுக 2004
செந்தில், பாமக
பு.த.இளங்கோவன், பாமக 2009 தாமரைச்செல்வன், திமுக செந்தில், பாமக 2014 அன்புமணி, பாமக
மோகன், அதிமுக 2019 எஸ். செந்தில் குமார், திமுக அன்புமணி ராமதாஸ், பாமக

தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக 4 முறையும், திமுக 3 முறையும், காங்கிரஸ் மற்றும் அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

2019-ம் ஆண்டு தருமபுரி மக்களவைத் தேர்தலின் நிலவரம்:

2024-ம் ஆண்டு தருமபுரி மக்களவைத் தொகுதி போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE