அரக்கோணம் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தின் அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு, ராணிப்பேட்டை, காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதிகளுடன், திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணி தொகுதியை இணைத்து உருவாக்கப்பட்ட மக்களவைத் தொகுதி அரக்கோணம்.பெருமளவு கிராமப்புறங்களைக் கொண்ட இந்தத் தொகுதி ஒரே நீர் ஆதாரம் பாலாறு. இந்த நதி வறண்டு விட்டதால் அங்கு விவசாயம் பொய்த்துவிட்டது. ஒரு சில பகுதிகளில் மட்டுமே மக்கள் விவசாயம் செய்கின்றனர். அதேசமயம், ராணிப்பேட்டை பகுதியில் தோல் தொழிற்சாலைகள் உள்ளிட்ட சில தொழில்கள் மட்டுமே நடைபெறுகின்றன.

இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பெருமளவு வேலை வாய்ப்புக்காக, அருகில் உள்ள நகரான சென்னைக்கு தொழிலாளர்களாக செல்கின்றனர். இதனால், தொழிலுக்காக தினந்தோறும் சென்னைக்கு பயணம் செய்வது இப்பகுதி மக்களின் வாழ்வில் அங்கமாகி விட்டது. கல்வி, வேலைவாய்ப்புக்காக இவர்கள் சென்னையையே சார்ந்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:

⦁ அரக்கோணம் (எஸ்சி)
⦁ சோளிங்கர்
⦁ திருத்தணி
⦁ ஆற்காடு
⦁ ராணிப்பேட்டை
⦁ காட்பாடி

அரக்கோணம் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,53,989
ஆண் வாக்காளர்கள்: 7,56,194
பெண் வாக்காளர்கள்: 7,97,632
மூன்றாம் பாலின வாக்காளர்கள்:163

முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்:

ஆண்டு வெற்றி பெற்றவர்
2ம் இடம் பெற்றவர் 1977
அழகேசன், காங் வீரமணி, திமுக 1980 வேலு, காங்
ரகுநாதன், அதிமுக
1984
ஜீவரத்தினம், காங் புலவர் கோவிந்தன், திமுக 1989 ஜீவரத்தினம், காங் மூர்த்தி, திமுக 1991 ஜீவரத்தினம், காங்
கன்னையன், திமுக
1996
வேலு, தமாகா ரவிராம், காங் 1998 கோபால், அதிமுக வேலு, தமாகா 1999 ஜெகத்ரட்சகன், திமுக கே.வி.தங்கபாலு, காங் 2004 வேலு, பாமக சண்முகம், அதிமுக 2009 ஜெகத்ரட்சகன், திமுக வேலு, பாமக 2014 ஹரி, அதிமுக இளங்கோ, திமுக 2019 ஜெகத்ரட்சகன், திமுக ஏ.கே.மூர்த்தி, பாமக

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் 5 முறையும், திமுக 3 முறையும், அதிமுக 2 முறையும், பாமக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

2019-ம் ஆண்டு அரக்கோணம் மக்களவைத் தேர்தலின் நிலவரம்:



2024-ம் ஆண்டு அரக்கோணம் மக்களவைத் தொகுதி போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

6 days ago

மேலும்