வேலூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024

By செய்திப்பிரிவு

வட தமிழகத்தின் ஆற்காடு பகுதியின் பண்பாட்டு பதிவுகளை தாங்கி நிற்கும் நகரம் வேலூர். பாலாற்றின் கரையில் வளர்ந்த நாகரிகத்தைப் பறைசாற்றி நிற்கும் வேலூர், சுதந்திர போராட்டத்திலும் முத்திரைப் பதித்த நகரம். பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான வேலூர் புரட்சி வரலாற்றில் முக்கிய பதிவாக திகழ்வது குறிப்பிடத்தக்கது. அரசியல் ரீதியாகவும் வேலூர் பகுதி முக்கியத்துவம் வாய்ந்தது. காங்கிரஸுக்கு எதிராக திராவிட இயக்கம் வலிமையடைந்தபோது, அதில் வேலூர் மிக முக்கிய பகுதியாக விளங்கியது. திராவிட இயக்கத் தலைவர்கள் பலரைத் தந்த பகுதியாகத் தான் வேலூர் இருக்கிறது.

சமூக ரீதியாக குறிப்பிட்ட சமூக கட்டமைப்பை கொண்டிராமல், பல சமூகங்களும் வாழும் பகுதி இது. இஸ்லாமியர்கள் வாக்குகள் அதிகம் உள்ள தொகுதி என்பதால் முஸ்லிம் லீக் கூட்டணி பலத்துடன் பலமுறை களம் கண்ட தொகுதி இது. இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:

⦁ வேலூர்
⦁ வாணியம்பாடி
⦁ ஆம்பூர்
⦁ அணைக்கட்டு
⦁ கே.வி.குப்பம் (தனி)
⦁ குடியாத்தம் (தனி)

வேலூர் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை:15,09,964
ஆண் வாக்காளர்கள்: 7,31,831
பெண் வாக்காளர்கள்: 7,77,922
மூன்றாம் பாலின வாக்காளர்கள்:211

முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்:

ஆண்டு வெற்றி பெற்றவர் 2ம் இடம் பெற்றவர் 1971 உலகநம்பி, திமுக மணவாளன், ஸ்தாபன காங் 1977 தண்டாயுதபாணி, ஸ்தாபன காங் அப்துல்சமது, சுயேச்சை 1980 அப்துல்சமது, சுயேச்சை தண்டாயுதபாணி, ஜனதா 1984 ஏ.சி.சண்முகம், அதிமுக ராமலிங்கம், திமுக 1989
அப்துல்சமது, காங் அப்துல் லத்தீப், திமுக 1991 அக்பர் பாஷா, காங் சண்முகம், திமுக
1996
சண்முகம், திமுக
அக்பர் பாஷா, காங் 1998 என்.டி.சண்முகம், பாமக முகமது சாதிக், திமுக 1999
என்.டி. சண்முகம், பாமக
முகமது அசீப், அதிமுக
2004 காதர்முகைதீன், திமுக சந்தானம், அதிமுக 2009 அப்துல் ரஹ்மான், திமுக வாசு, அதிமுக 2014
செங்குட்டுவன், அதிமுக ஏ.சி.சண்முகம், பாஜக 2019 டி.எம் கதிர் ஆனந்த், திமுக ஏ.சி.சண்முகம், அதிமுக

வேலூர் மக்களவைத் தொகுதியில் 5 முறை திமுகவும், காங்கிரஸ் 3 முறையும், அதிமுக, பாமக இரு முறையும் வெற்றி பெற்றிருக்கிறது.

2019-ம் ஆண்டு வேலூர் மக்களவைத் தேர்தலின் நிலவரம்:

2024-ம் ஆண்டு வேலூர் மக்களவைத் தொகுதி போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்