அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி என நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சரான வரலாறு தமிழ்நாட்டில் உண்டு. அண்ணா 1962 இல் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு வென்று மக்களவை உறுப்பினரானார்; 1967இல் முதலமைச்சரானார்.
ஜெயலலிதா 1984-89 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்; 1991இல் முதலமைச்சரானார். எடப்பாடி பழனிசாமி 1998இல் திருச்செங்கோடு தொகுதியில் வென்று மக்களவை உறுப்பினரானவர்; அவர் 2017இல் தமிழ்நாடு முதலமைச்சரானார்.
முதலமைச்சராக இருந்தவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட நிகழ்வும் நடந்திருக்கிறது. தமிழ்நாட்டில் 1954 முதல் 1963 வரை 9 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த காமராஜர் 1969இல் நாகர்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் வென்று முதல் முறையாக மக்களவை உறுப்பினரானார்.
1971இல் அதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வென்றார். காமராஜருக்குப் பிறகு - 53 ஆண்டுகளுக்குப் பிறகு - நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம், ராமநாதபுரத்தில் இந்த முறை களம் காண்கிறார்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
9 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago