உலகச் சமூக மாமன்றம் 2024 - உயர்ந்து நிற்கும் நம்பிக்கை

By அ.இருதயராஜ்

நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவில், உலகச் சமூக மாமன்றத்தின் (World Social Forum 2024) மாநாடு பிப்ரவரி (15-19) நடந்து முடிந்துள்ளது. ‘இன்னொரு உலகம் சாத்தியம்’, ‘மாற்று உலகம் சாத்தியமே!’ என்கின்ற முழக்கங்களோடு ஆரம்பித்த இந்த மாநாடு, ஏறக்குறைய 60 தீர்மானங்களை முன்னிறுத்தியுள்ளது. தொடக்க நாளில் நடந்த பேரணியில் கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள், பழங்குடியினர் எனப் பல்வேறு பிரிவினர் கலந்துகொண்டது இன்னொரு சிறப்பம்சம்.

மாநாட்டின் பின்னணி: உலகச் சமூக மாமன்றம், உலகமயமாக்கலுக்கு எதிராகவும் எதேச்சதிகாரங்களுக்கு எதிராகவும் 2001இல் பிரேசிலில் ஆரம்பிக்கப்பட்டது. 15 முறை இதன் மாநாடு பல்வேறு நாடுகளில் நடந்திருக்கின்றது. ஆசியாவில் மும்பையிலும் (2004), தற்போது நேபாளத்திலும் நடத்தப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய 98 நாடுகளிலிருந்து ஐம்பதாயிரம் பேர் பங்கேற்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE