‘‘சங்கத் தமிழிலும் பேசும் ரோபாட்!'’ - பேராசிரியர் வாசு அரங்கநாதன் நேர்காணல்

By ஆனந்தன் செல்லையா

அண்மையில் சென்னையில் நடந்துமுடிந்த கணித்தமிழ் 24 மாநாட்டில், பேராசிரியர் வாசு அரங்கநாதன் செயல்விளக்கத்துடன் முன்வைத்த ‘தமிழ் ரோபாட்’ என்ற ஆய்வுரை பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. மயிலாடுதுறையைச் சேர்ந்த இவர், அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுப் பிரிவில் பணிபுரிகிறார். தமிழையும் கணினியையும் ஒருங்கிணைத்து ஆய்வு செய்வதிலும் தமிழ் கற்பிப்பதிலும் 1996இலிருந்து ஈடுபட்டுவருகிறார். வாசு அரங்கநாதனுடன் உரையாடியதிலிருந்து...

கணினியைத் தமிழ் பேசச் செய்தல் - உங்களது இந்த முயற்சி என்னென்ன பணிகளை உள்ளடக்கியது? - தமிழ் இலக்கியங்களை மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தல், இணையதளம் வழியே தமிழ் கற்பித்தல் ஆகியவைதான் அடிப்படை நோக்கங்கள். நிரல் (புரோகிராம்) மூலம் எழுத்து வடிவத்தைப் பேச்சு வடிவமாக மாற்றுதல், பேச்சு வடிவத்தை எழுத்து வடிவமாக மாற்றுதல், ஒற்றுப்பிழைகளைத் திருத்துதல், தமிழ் மொழியிலான கட்டளைகளைக் கணினியைப் புரிந்துகொள்ளச் செய்து, அதை ரோபாட் போலப் பயன்படுத்துதல் ஆகிய பணிகளும் இதில் அடங்கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE