தொகுதி விகிதமும் கட்சிகளின் பிரதிநிதித்துவமும்

By நந்தன்

இந்திய மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களில் எந்தக் கட்சி அல்லது கூட்டணி அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளில் வென்றிருக்கிறதோ, அதுவே ஆட்சி அமைக்கும் அதிகாரத்தைப் பெறுகிறது. எனவே, தேர்தல் முடிவைத் தீர்மானிப்பது தொகுதிகளின் எண்ணிக்கை தான். முதல் மூன்று மக்களவைத் தேர்தல்களில் வெற்றிபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ், மூன்று தேர்தல்களிலும் முக்கால்வாசி அல்லது அதற்கு ஓரிரு சதவீதம் குறைவான எண்ணிக்கையிலான தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தது.

1967 தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிதான் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது என்றாலும், தேர்தல் நடத்தப்பட்ட 520 தொகுதிகளில் 283இல் மட்டுமே அக்கட்சி வென்றது. வெற்றிபெற்ற தொகுதிகளின் விகிதம் 54%ஆகச் சரிந்தது. ஜவாஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி போன்ற மூத்த தலைவர்களின் மறைவுக்குப் பிறகு, இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் எதிர்கொண்ட முதல் தேர்தல் அது. மீண்டும் 1971 தேர்தலில் காங்கிரஸின் தொகுதி விகிதம் 67%ஆக அதிகரித்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE