அடக்குமுறையை முறியடிப்பதே சமூகநலத் திட்டங்களின் நோக்கம்! - ஜெயரஞ்சன், மாநில திட்டக் குழுத் துணைத் தலைவர் நேர்காணல்

By ம.சுசித்ரா

பொருளாதார அரசியல் வெகுஜன மக்களுக்குப் புரியும்படியாகத் தமிழில் காத்திரமாக ஒலித்துவரும் குரல் பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சனுடையது. தமிழ்நாடு அரசின் மாநிலத் திட்டக் குழுத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்துவரும் அவருடன் தமிழ்நாட்டின் திட்டங்கள் குறித்துப் பேசியதிலிருந்து...

தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலம் என்கிற கருத்தை அரசியலராக அல்லாமல், அறிவுப்புலத்தைச் சேர்ந்தவராகப் பத்தாண்டுகளுக்கும் மேலாக முன்வைத்துவருபவர் நீங்கள். அப்படியிருக்க கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தமிழ்நாடு அரசின் மாநிலத் திட்டக் குழுவில் செயலாற்றி வருகிறீர்கள். தற்போது உங்களுடைய நிலைப்பாடு என்ன? - இன்று வரை நான் திமுக கட்சி உறுப்பினர் அல்ல. ஓர் ஆய்வு மாணவனாகப் புள்ளிவிவரங்கள், ஆதாரங்களின் அடிப்படையில் அறுதியிட்டுச் சொல்கிறேன் - தமிழ்நாடு வளர்ச்சியடைந்த, முன்னேறிய மாநிலமே. தனிநபர் வருமானம், வறுமை ஒழிப்பு, பொதுப் போக்குவரத்து வசதி, மின் விநியோகம், சுகாதாரக் கட்டமைப்பு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில், மத்திய அரசு ஆண்டுதோறும் வெளியிடும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆய்வறிக்கையே இதற்கு அத்தாட்சி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE