புத்தகத் திருவிழா 2024 | ஒரே நூலில் ஐந்து மர்மக் கதைகள்

By செய்திப்பிரிவு

தமிழ்ப் புனைவுகளில் துப்பறியும், மர்ம நாவல்கள் எழுதியவர்களில் தமிழ்வாணனுக்குத் தனி இடம் உண்டு. இவருடைய கதைகள் விறுவிறுப்பானவை. பல்வேறு உலக நாடுகளில் நிகழ்வதுபோல எழுதுவது அவருடைய பாணி. சங்கர்லால் கதாபாத்திரம் அவருடைய கதைகளின் மையம். மணிமேகலைப் பிரசுரம் தொகுத்து வெளியிட்டு வரும் தமிழ்வாணனின் படைப்புகளில் ஒன்றான இந்த ஏழாம் பாகத்தில் ‘மனிதர்கள் இல்லாத தீவு’, ‘மூவரை விழுங்கிய முதலை’, ‘ஆயிரம் கண்கள்’, ‘மூடிக் கிடக்குதே உன் நெஞ்சம்’, ‘முரட்டுப் பெண்’ ஆகிய ஐந்து மர்ம நாவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் (பாகம் 7)
தமிழ்வாணன்

மணிமேகலைப் பிரசுரம்
விலை: ரூ.650

பாலஸ்தீனைப் புரிந்துகொள்ள... இன்று பற்றி எரிந்துகொண்டிருக்கும் பாலஸ்தீனப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கு உதவும் முக்கியமான புத்தகங்களில் ஒன்றான இது, பாலஸ்தீன் மீதான காலனிய ஆக்கிரமிப்பின் ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி வெளியிடப்பட்டது.

சமகால இஸ்ரேலின் தோற்றம் - அடையாளம் பற்றிய மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துகள் மூலம், தற்போது முன்னெடுக்கப்படும் பிரச்சாரமும் பாலஸ்தீன மக்கள் மீதான அடக்குமுறையை நிலைநிறுத்துவதில் எவ்வாறு உதவுகின்றன என்பதை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ளார் இஸ்ரேலிய வரலாற்றாசிரியர் இலான் பப்பே.

இஸ்ரேல் பற்றிய பத்து கட்டுக்கதைகள்
இலான் பப்பே

தமிழில்: பிரேம்
செம்மையாக்கம்:
ரா.அபுல் ஹசன்
சீர்மை வெளியீடு
விலை: ரூ.300

இந்து தமிழ் திசை வெளியீடு - ‘இந்து தமிழ் திசை’ எப்போதும் போட்டித் தேர்வு மாணவர்கள் மீது தனிக் கவனம் செலுத்திவருகிறது. அந்த வகையில், ‘இந்து தமிழ் திசை - இயர்புக்’ ஆறாவது ஆண்டாக வெளியாகியுள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகும் மாணவர்களுக்கு இந்த இயர்புக் பெரும் பயனளிக்கும். ‘சந்திரயான் 3’ உள்ளிட்ட கடந்த ஆண்டின் முக்கிய சாதனைகள், ‘சாட்ஜிபிடி’ போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்த கட்டுரைகள், 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்த விரிவான அலசல் ஆகிய சிறப்புப் பகுதிகள் நூலுக்கு மதிப்பு கூட்டுகின்றன.

இந்து தமிழ் திசை - இயர்புக் 2024
விலை: ரூ.275
அரங்கு எண்: 540, 541

கல்பனா எங்கே போனாள்? - பிரபல தத்துவவியல் பேராசிரியர் சுந்தர் சருக்கை எழுதியுள்ள நாவல் இது. கர்நாடகத்தில் மேற்கு மலைத் தொடரை ஒட்டியுள்ள மலநாடு என்கிற கிராமமே நிகழ்களம். கல்பனா என்கிற 12 வயதுச் சிறுமி ஒரு திங்கள்கிழமை காலை காணாமல் போய்விடுகிறாள். அவளுக்குப் பிரியமான அஜ்ஜியின் பிரார்த்தனையைக் கல்பனா கிண்டல்செய்ய, ‘என் பிரார்த்தனைகளைப் பின்தொடர்ந்து போ...’ என அவர் சபித்துவிடுகிறார்.

பிரார்த்தனையைப் பின்தொடர்ந்து சென்று எங்கோ அவள் திசை மாறிப் போய்விட்டதாக அஜ்ஜி நம்புகிறார். மூன்று நாள்களுக்குப் பிறகு அவள் திரும்புகிறாள். தான் புழங்கிய அந்த வெளியையே அவள் புதிதாகப் பார்க்கிறாள். அவள் மனதுக்குள் என்னவோ நடந்துள்ளது. ஊர்க்காரர்கள் விசாரித்துவிட்டுச் செல்கிறார்கள், போலீஸ்காரர் வருகிறார். அம்மாவும் அப்பாவும் அஜ்ஜியும் ஏதேதோ கேட்டுப் பார்க்கிறார்கள். பலரும் கிசுகிசுக்கிறார்கள். அந்தச் சிறுமிக்கு என்னதான் ஆனது என்பதை மனம் சார்ந்த கேள்விகளுக்கான பதிலாக விவரிக்கிறது இந்த நாவல்.

பிரார்த்தனையைப் பின்தொடர்ந்து
சுந்தர் சருக்கை

தமிழில்: சீனிவாச ராமாநுஜம்
எதிர் வெளியீடு
விலை: ரூ.599

செம்மை: தமிழிசையின் ஆதி நூல்! - தமிழிசையின் ஆழங்கால்பட்ட வேரை நோக்கிய பயணத்தில் வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் என்பவரால் கண்டறியப்பட்ட அரிய ஆவணம்தான் ‘பஞ்ச மரபு’ என அறியப்படும் இந்த இசை நூல். சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் தமக்கு உதவிய நூல்களின் பட்டியலில் சேறை அறிவனாரின் பஞ்ச மரபு நூலையும் குறிப்பிட்டிருப்பதிலேயே இந்த நூலின் தொன்மையை அறிய முடியும்.. டாக்டர் மகாலிங்கம், பஞ்ச மரபின் ஏடுகளைப் பாதுகாத்து வைத்திருந்த தெய்வசிகாமணியை 1973இல் பதிப்பாசியராக்கி நூலின் முதல் பகுதியை 1975இல் முழு நூலாகவும் வெளியிட்டார்.

அதன்பின், 1993இல் இசைத் தமிழ்ப் பேரறிஞர் வீ.பா.கா.சுந்தரத்தின் ஒப்பீட்டு ஆய்வுடன் நூலைக் குறித்த விரிவான விருத்தி உரையுடன், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வழியாக வெளியிட்டார் டாக்டர் மகாலிங்கம். தற்போது அருட்செல்வர் நா.மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழா வெளியீடாக மறுபதிப்பு கண்டுள்ளது. யாழ், குழல், குரலிசை, கூத்து, தாளம் போன்ற ஐந்து இசைக் கூறுகளின் மரபை விளக்கும் 207 பாடல்களைக் கொண்டது பஞ்ச மரபு நூல்.

சேறை அறிவனாரின் பஞ்ச மரபு - இசைத் தமிழ் நூல்
பதிப்பாசிரியர்: சிற்பி பாலசுப்பிரமணியம்

அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்
விலை: ரூ.500

முத்துகள் 5

சேறை அறிவனாரின் பஞ்ச மரபு - இசைத் தமிழ் நூல்
பதிப்பாசிரியர்: சிற்பி பாலசுப்பிரமணியம்
அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்
விலை: ரூ.500

ரஷ்ய மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்
தமிழில்: கீதா மதிவாணன்
கனலி
விலை: ரூ.300

மேடம் ஷகிலா
வித்யா.மு
ஹெர் ஸ்டோரிஸ்
விலை: ரூ.480

தந்தையை விஞ்சிய ராஜேந்திர சோழனின்
வீர வரலாறு!
அமுதன்
மணிமேகலைப் பிரசுரம்
விலை: ரூ.200

சீமுர்க் (சிறுகதைகள்)
பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
யாவரும் பப்ளிஷர்ஸ்
விலை: ரூ.180

ஒரு திராவிடப் புதிர்: நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபணு வரலாறு
இராம.பிச்சப்பன்
பிச்சு அறக்கட்டளை
விலை: ரூ.600

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்