இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ஜி.ராஜன், இந்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகரின் அலுவலகத்தில் பொருளாதார வல்லுநராகப் பணியாற்றிய ரோகித் லாம்பா ஆகியோர் இணைந்து எழுதியுள்ள நூல். உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் நிலை குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள ஓர் ஆழமான ஆய்வு இந்த நூல்.
இந்தியாவின் பொருளாதார எதிர்காலம் குறித்த சரியான நேரத்தில் வெளிவந்துள்ள இந்நூல், மனித மூலதனத்தில் முதலீடு செய்வது, உயர்ந்த திறன்களை உள்ளடக்கிய சேவைகளிலும் புதுமையான புதிய பொருட்களை மையமாகக் கொண்ட உற்பத்தியிலும் வாய்ப்புகளை விரிவுபடுத்துவது ஆகியவற்றின் மூலம் பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு துரிதப்படுத்த முடியும் என்பதை விளக்குகிறது. இந்தியாவின் வருங்காலம் குறித்து அக்கறையும் ஈடுபாடும் கொண்டுள்ள எவரொருவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
பழைய வார்ப்புகளை உடைத்தெறிவோம்!
இந்தியாவின் பொருளாதார எதிர்காலம் குறித்த ஒரு புதிய பார்வை
ரகுராம் ஜி.ராஜன்
ரோகித் லாம்பா
தமிழில்: PSV குமாரசாமி
மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
விலை: ரூ.599
50% தள்ளுபடி விலையில் தமிழ்ச் செவ்வியல் நூல்கள்: தமிழ் மொழியின் தொன்மையையும் தனித்தன்மையையும் வெளிப்படுத்தும் இலக்கிய நூல்கள், ஆராய்ச்சி நூல்கள், வரலாற்று நூல்களை வெளியிடும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை புத்தகக் காட்சியில் 50% தள்ளுபடி விலையில் நூல்களை விற்பனைசெய்கிறது.
» மக்கள் மருந்தகங்களால் ஏழைகளின் ரூ.26,000 கோடி சேமிப்பு: அமைச்சர் அமித் ஷா பெருமிதம்
» துணைவேந்தர்கள் நியமன தேடுதல் குழு அறிவிப்பாணைகளை திரும்பப் பெற்றார் ஆளுநர் ரவி
எண் 440, 441இல் அமைந்துள்ள இந்நிறுவனத்தின் அரங்கில் 10க்கும் மேற்பட்ட திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள், செவ்வியல் நூல்கள், ஆய்வு நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவை 50% தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. பார்வைத்திறன் குறைபாடு உடையோர், முன்பதிவு செய்து பிரெய்லி முறையில் தயாரிக்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட தமிழ்ச் செவ்வியல் நூல்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்து தமிழ் திசை வெளியீடு
மத்தியில் பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே பெரும் விவாதப் பொருளாக நீடித்து வருகிறது ‘பொது சிவில் சட்டம்’. இந்திய மக்கள் அனைவரின் தனிப்பட்ட உரிமைகளையும் ஒரு பொதுவான சட்டத்தின் கீழ் கொண்டுவருவதே இந்தச் சட்டத்தின் நோக்கம் என்றாலும், ‘எண்ணற்ற வேற்றுமைகளைத் தன்னகத்தே கொண்டுள்ள மிகப் பெரிய ஜனநாயக நாட்டில், தனிப்பட்ட உரிமைகளைப் பொதுவாக்குதல் கூடாது’ என்று முன்வைக்கப்படும் வாதங்களையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியாது.
இந்தப் பின்னணியில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ‘பொது சிவில் சட்டம்’ குறித்த சாதக, பாதகங்களை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் வெவ்வேறு கோணங்களில் இந்நூலில் முன்வைத்துள்ளனர்.
பொது சிவில் சட்டம்... இந்தியாவுக்கு வேண்டுமா, வேண்டாமா? 360° பார்வை
விலை: ரூ.200
திராவிட இயக்க வரலாற்றின் கையேடு: நூறாண்டுக்கும் மேலான வரலாறு கொண்ட திராவிட இயக்க வரலாற்றை இன்றைய இளைய தலைமுறையிடம் எளிமையாக படக்கதை வழியாகக் கொண்டுசெல்லும் வகையில் வெளியாகியிருக்கிறது ‘திராவிடத்தால் வாழ்கிறோம்’. ‘முரசொலி’ நாளிதழில் தினமும் வெளியாகும் படக்கதையின் தொகுப்பு இரண்டு பாகங்களாக வெளியாகியிருக்கின்றன.
முதல் பாகத்தில் 19ஆம் நூற்றாண்டில் பிறப்பால் கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டவர்களிலிருந்து தொடங்கும் இந்த நூல், இரண்டாம் பாகத்தில் திருவாரூரில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தோடு முடிகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்கத் தகவல்களைச் சுவாரசியமான எழுத்து வடிவில் தந்திருக்கிறார் கோவி.லெனின். இதற்கு ஓவியங்கள் மூலம் கி.சொக்கலிங்கம் உயிர் தந்திருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றை அறிய விரும்புவோருக்கு சிறந்த, எளிய கையேடு.
திராவிடத்தால் வாழ்கிறோம் 1 & 2
எழுத்து: கோவி.லெனின்,
ஓவியம்: கி.சொக்கலிங்கம்
முத்தமிழறிஞர் பதிப்பகம்
விலை: தலா ரூ.250
வாழ்க்கை முறை வழிகாட்டி: வாழ்க்கையில் முன்னேறுவதற்கான உழைப்பில் தொடங்கி, திட்டமிட்டு வெற்றி பெறுவது வரையான பல்வேறு அம்சங்களை ‘தொடங்கு... தொடர்... தொடுவாய் உச்சம்’ என்கிற இந்த நூல் பேசுகிறது. இலக்கை எப்படி நிர்ணயிக்க வேண்டும், அந்த இலக்கை அடைய என்னென்ன இடர்களைத் தாண்ட வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகள் கொண்ட 55 தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. எளிய நடையில் எழுதப்பட்டிருப்பது சுவாரசியத்தைக் கூட்டுகிறது. அன்றாட வாழ்விலிருந்தே உதாரணங்களை அளித்திருப்பது வாசிப்பு அனுபவத்தை இனிமையாக்குகிறது.
தொடங்கு... தொடர்... தொடுவாய் உச்சம்
பரமன் பச்சைமுத்து
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.499
பரபரப்பான விற்பனையில் ‘என்றும் தமிழர் தலைவர்' - ‘இந்து தமிழ் திசை' வெளியீடான பெரியார் குறித்த பெருநூல் ‘என்றும் தமிழர் தலைவர்' நூலுக்கான முன்பதிவு 2023 டிசம்பர் மாத மத்தியில் தொடங்கியது. 2024 ஜனவரி முதல் வாரத்திலிருந்து நூல் கிடைக்கத் தொடங்கியது.
தற்போது நடைபெற்றுவரும் 47ஆவது சென்னை புத்தகக் காட்சி தொடங்கிய நாளில் இருந்தே பரபரப்பாக விற்பனையாகிவருகிறது ‘என்றும் தமிழர் தலைவர்'. தற்போது விற்றுவரும் வேகத்தில் இந்த நூலின் முதல் பதிப்பு ஒரு சில நாள்களில் தீர்ந்துவிடும். விரைவில் நூலின் இரண்டாம் பதிப்பு வெளியாக இருக்கிறது.
முத்துகள் 5
கலை இலக்கிய சங்கதிகள்
விட்டல் ராவ்
ஜெய்ரிகி பப்ளிஷிங்ஸ்
விலை: ரூ.250
தமிழில் தலித்தியம்
சுப்பிரமணி இரமேஷ்
கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ.260
சிலப்பதிகாரமும் கண்ணகி வழிபாடும்
ப.ஜெயகிருஷ்ணன்
என்.சி.பி.ஹெச்.
விலை: ரூ.210
படைக்கும் கலையில்
சிறக்கும் வழிகள்
ரமேஷ் வைத்யா
கமர்கட் பிரசுரம்
விலை: ரூ.165
எந்திர அறிஞன்
Artificial
Intelligence-யின்
கதை
வினோத் ஆறுமுகம்
வீ கேன் புக்ஸ்
விலை: ரூ.150
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago