ஜனவரி 31: பிரிட்டன் படைகள் மீதான நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலைத் தொடரப்போவதாக அறிவித்தது ஜெர்மனி.
பிப்ரவரி 3: தனது வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று ஜெர்மனியிடம் அமெரிக்கா கேட்டுக்கொண்டது.
பிப்ரவரி 24: பிரிட்டன் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத துருக்கிப் படைகள் பாக்தாதுக்குத் தப்பி ஓடின.
மார்ச் 11: மூன்று நாட்கள் நடந்த சண்டைக்குப் பிறகு, பாக்தாத் நகரை பிரிட்டன் படைகள் கைப்பற்றின.
மார்ச் 15: புரட்சியாளர்களின் கை ஓங்கிய நிலையில், ரஷ்யப் பேரரசர் இரண்டாம் நிக்கோலஸ் பதவி விலகினார்.
மார்ச் 26: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில், துருக் கிப் படைகளுக்கு எதிரான முதல் சண்டை யில் இறங்கியது பிரிட்டன்.
ஏப்ரல் 6: ஜெர்மனி மீது போர்ப் பிரகடனம் செய்தது அமெரிக்கா. படைகளைப் பலப்படுத்தும் ஏற்பாடுகள் துரிதகதியில் தொடங்கின.
ஏப்ரல் 19: பாலஸ்தீனத்தில் இரண்டாம் காஸா சண்டை தொடங்கியது. துருக்கிப் படைகளின் தாக்கு தலில் 6,000 பிரிட்டன் வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜூன் 13: லண்டன் நகரின் மீது பெரிய அளவிலான விமானத் தாக்குதலைத் தொடங்கியது ஜெர்மனி.
ஜூன் 25: அமெரிக்காவின் முதல் படைப்பிரிவு பிரான்ஸைச் சென்றடைந்தது.
ஆக்ஸ்ட் 20: பிரெஞ்சு - ஜெர்மன் படைகளுக்கு இடையே மூன்றாம் வெர்டன் சண்டை தொடங் கியது.
அக்டோபர் 19: பிரிட்டன் மீதான கடைசி விமானத் தாக்குதல் நடந்தது. 11 ஜிப்லின் விமானங்கள் குண்டு வீசித் தாக்கின.
நவம்பர் 7: காஸா பகுதியைக் கைப்பற்றியது பிரிட்டன்.
டிசம்பர் 11: துருக்கியரின் 673 ஆண்டு ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது பிரிட்டன்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
22 days ago