ரேபிஸிலிருந்து மக்களைக் காக்க என்ன வழி?

By எஸ்.பெருமாள் பிள்ளை

சென்னை ராயபுரத்தில், சமீபத்தில் 28 பேரைக் கடித்த தெருநாய்க்கு ‘ரேபிஸ்’ தொற்று (rabies infection) இருந்ததாக வெளியான செய்தி, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடுமுழுவதும் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில், தினமும் 20 முதல் 25 பேர் நாய்க்கடி சிகிச்சைக்காக வரும் நிலையில், இந்தச் செய்தி அதிர்ச்சி ஏற்படுத்தியதில் ஆச்சரியமில்லை. இந்நிலையில், வெறிநாய்க்கடி, ரேபிஸ் வைரஸ் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை.

ரேபிஸ் வைரஸ்: ரேப்டோ வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த, லைசா வைரஸ் வகைதான் ரேபிஸ் வைரஸ். இது புல்லட் வடிவத்தைக் கொண்டது. ரேபிஸ் தொற்றுக்குள்ளான குரங்கு, பூனை, குதிரை, நரி, கீரி, ஓநாய், வௌவால் போன்ற பாலூட்டி விலங்குகள் கடிப்பதன் மூலமும் மனிதர்களுக்கு ரேபிஸ் தொற்று ஏற்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலும் நாய்கள் மூலமாகவே ரேபிஸ் நோய் மனிதர்களுக்குப் பரவுகிறது. மனிதர்களின் அன்றாட வாழ்வில் அதிகம் தொடர்புள்ள விலங்கு, நாய். தடுப்பூசி போடப்படாத தெருநாய் கடிப்பதால்தான் 95% இந்த நோய் ஏற்படுகிறது. அதனால்தான் இதனை ‘வெறிநாய்க்கடி நோய்’ என்கிறோம். குழந்தைகள் நாய்க்கடிக்கு உள்ளாகும்போது, தொற்று ஆபத்து அதிகம். இந்த நோயால் உயிரிழக்கும் 10 பேரில் 4 பேர், 15 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் எனத் தெரியவந்திருக்கிறது. நாய் கடித்தாலே ரேபிஸ் வரும் என்று கூற முடியாது. ரேபிஸ் தொற்று இருந்தால்தான் அதற்கான வாய்ப்பு உண்டு. இருந்தாலும், எந்தவிதத்திலும் இந்த மோசமான நோய்க்கு வாய்ப்பு தரக் கூடாது என்பதால், நாயிடம் கடிபடுவதைத் தடுத்துக்கொள்ள வேண்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE