தெலங்கானா: உக்கிரமான மும்முனைப் போட்டி

By டி. கார்த்திக்

கடைசியாக உருவாக்கப்பட்ட இந்திய மாநில மான தெலங்கானா, மூன்றாவது சட்டமன்றத் தேர்தலை இன்று (நவம்பர் 30) சந்திக்கிறது. 2014, 2018 தேர்தல்களில் வென்ற பாரத ராஷ்ட்ரிய சமிதி (பிஆர்எஸ் - முன்பு தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி), ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளத் துடிக்கிறது. காங்கிரஸும் பாஜகவும் ஆட்சிக்குக் குறிவைக்கின்றன. ஆக, இந்த முறை தெலங்கானாவில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில், ஆட்சிஅமைக்க 60 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். தனித் தெலங்கானா அமைய பலகட்டப் போராட்டங்களை முன்னெடுத்த பிஆர்எஸ் கட்சிக்கு மக்களின் ஆதரவு அபரிமிதமாகக் கிடைத்தது. 2014இல் ஒன்றுபட்ட ஆந்திரத்துக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தெலங்கானா பகுதியில் 63 தொகுதிகளில் வென்று பிஆர்எஸ் ஆட்சியைக்கைப்பற்றியது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கே.சந்திரசேகர ராவ் (கேசிஆர்) மக்கள் நலத் திட்டங்களை அடுக்கடுக்காகச் செயல்படுத்தினார். அந்தத் தெம்பில், 2018இல் முன்கூட்டியே தேர்தலை நடத்தி 88 தொகுதிகளில் வெற்றி பெற்ற பிஆர்எஸ், ஆட்சியை வலுவாகத் தக்கவைத்துக் கொண்டது. அப்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கியில் பிஆர்எஸ் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த முறை நிலைமை வேறு!

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE