எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூற்றில் 185இலிருந்து 195வரையிலான பாடல்கள் வாழ்க்கையின் அடிப்படை அர்த்தங்களைத் தேடுகிற தத்துவப் பாடல்களாகும். இப்பாடல்கள் அனைத்தும் பொருண்மொழிக் காஞ்சி என்னும் துறையில் அமைந்தவை. ‘எரிந்து இலங்கு சடைமுடி முனிவர்/புரிந்து கண்ட பொருள் மொழிந்தன்று’ என்று பொருண்மொழிக் காஞ்சிக்குப் புறப்பொருள் வெண்பாமாலை பொருள் தருகிறது. இப்பகுதியிலேயே எல்லாரும் அறிந்த ஔவையின் பின்வரும் பாடல் இடம்பெறுகிறது. ‘நாடா கொன்றோ காடா கொன்றோ/அவலா கொன்றோ மிசையா கொன்றோ/எவ்வழி நல்லவர் ஆடவர்/அவ்வழி நல்லை வாழிய நிலனே’.
அதுபோலவே கீழ்வரும் பாடலும் ஒரு தத்துவக் கருத்தை முன்வைக்கிறது: ‘தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி/வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்/நடுநாள் யாமத்தும் பகலும்/துஞ்சான்/கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்/உண்பது நாழி உடுப்பவை இரண்டே/பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே/செல்வத்துப் பயனே ஈதல்/துய்ப்பேம் எனினே தப்புந பலவே’. இதன் விளக்கம், தெளிந்த நீரால் சூழப்பட்ட உலகம் முழுவதையும் பிற வேந்தர்க்குப் பொதுவாதல் அன்றித் தமக்கே உரித்தாக ஆட்சிசெய்து வெண்கொற்றக் குடையால் நிழல்செய்த அரசர்க்கும் இடையாமத்தும் நாள்யாமத்தும் துயிலாது விரைந்த வேகம் கொண்ட விலங்குகளை வேட்டையாடித் திரியும் கல்வியில்லாத ஒருவனுக்கும் உண்ணப்படும் பொருள் நாழித் தானியமே. உடுக்கப்படுபவை அரையாடை, மேலாடை என இரண்டே. இவை போலப் பிற தேவைகளும் ஒன்றாகவே விளங்கும். ஆதலால், செல்வத்தால் பெறும் பயனாவது கொடுத்தல் ஆகும். செல்வத்தைத் தானே நுகர்வோம் என்று கருதினால், அது பல தவறான வழிகளிலே இட்டுச்செல்லும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago